Recent News

Recent Circulars

மூட்டா முதலாவது கல்வி மாநாடு - 18-02-2012 - தெரிவுமுறை பாடத்திட்டம் குறித்த கருத்தரங்கம்

முதலாவது கல்வி மாநாடு    

                                                            
கடந்த 2010ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற்ற மூட்டாவின் 20ஆவது பொது மாநாட்டில் இரண்டு பொதுமாநாடுகளுக்கிடையில் கல்வி மாநாடு ஒன்றினை நடத்துவது என்று முடிவாற்றப்பட்டது. மூட்டாவின் பொதுக்குழு முடிவின்படி, மூட்டாவின் முதலாவது கல்வி மாநாடு  வருகின்ற பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி, மூட்டா மூன்றாம் மண்டலப் பொறுப்பில்
New Perspectives In CBCS IN TAMILNADU” என்ற கருப்பொருளில் தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரியில் நடைபெறவுள்ளது.
கடந்த மூன்றாண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற தெரிவு முறைப் பாடத்திட்டம் (CBCS) குறித்து மூட்டா சார்பாக அறிக்கை ஒன்றினைத் தயாரித்து மாநாட்டில் சமர்ப்பிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி அறிக்கையினைத் தயார் செய்வதற்கு மூட்டாவின் கல்விக்குழு அமைப்பாளர் முனைவர்.T.சந்திரகுரு தலைமையில் பேரா.M.நாகராஜன் (Member-Syndicate, MSU), பேரா.R.முருகேசன் (Vice-President, MUTA), முனைவர்.A.T.செந்தாமரைக்கண்ணன் (Secretary, MUTA Zone I) முனைவர்.N.தேன்பாண்டியன் (President, MUTA Zone II) பேரா.M.வில்சன் (President, MUTA Zone IV)   பேரா.S.விவேகானந்தன் (President, MUTA), பேரா.T.மனோகரா ஜஸ்டஸ் (General Secretary, MUTA) மற்றும் பேரா.S.சுப்பாராஜு (Treasurer, MUTA) ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.  இக்குழுவானது கிளைகளின் கருத்துக்களை அறிந்து அவ்வறிக்கையினைத் தயார் செய்யும்.
மாநாட்டில் மூட்டா சார்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையினைத் தயார் செய்திட உதவிடும் வண்ணம், அனைத்துக் கிளைகளும் தங்களது கிளைகளில் விவாதம் நடத்தி தங்களது கிளையின் கருத்துகளை முனைவர்.T.சந்திரகுரு, கல்விக்குழு அமைப்பாளர், 6 காக்காத் தோப்புத் தெரு, மதுரை-625001 என்ற முகவரிக்கு 15-02-2012க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மாநாட்டுக் கருப்பொருள் தொடர்பாக மன்ற உறுப்பினர்கள் தங்களது ஆய்வுக் கட்டுரையை கிளைச் செயலாளர் மூலமாக கல்விக்குழு அமைப்பாளருக்கு அனுப்பி வைக்கலாம். கிளையின் கருத்துகளையும், உறுப்பினர்களது ஆய்வுக் கட்டுரையையும் mutaacademicconference@gmail.com என்ற email idக்கும் கிளைச் செயலாளர்கள் அனுப்பி வைக்கலாம்.
மாநாட்டில் சிறப்புக் கருத்தாளர்களாக தமிழக அரசின் உயர்கல்விச்செயலாளர் முனைவர்.T.S.ஸ்ரீதர் அவர்கள் மற்றும் அய்பெக்டோவின் முன்னாள் தலைவர் பேரா.தாமஸ் ஜோசப் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்க உள்ளார்கள்.
கிளைப் பொருளாளர்கள் மாநாட்டுக் கட்டணமாக உறுப்பினர் ஒருவரிடமிருந்தும்         ரூபாய் 50/=வீதம் பெற்று உடனடியாக மூன்றாம் மண்டலப் பொருளாளர் முனைவர்.M.நசீர் அகமது, பொருளாளர், மூட்டா மூன்றாம் மண்டலம், சதக்கதுல்லா அப்பா கல்லூரி, திருநெல்வேலி என்ற முகவரிக்கு அனுப்பி வைத்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மாநாட்டில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

                                                                               

இவண்

பொதுச்செயலாளர்



Back