ஜேஏசி-டான்சாக் சார்பில் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்-அலுவலர் போராட்டத்திற்கு ஆதரவாக இயக்கங்கள் நடத்த முடிவு

ஜேஏசி-டான்சாக் சுற்றறிக்கை

சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம்.

அரசு நிதியுதவி பெறும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 58 வயதில் பணி ஓய்வு பெற்று சென்றிருக்க வேண்டிய பதிவாளருக்கு 69 வயதாகியும் மீளவும் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. பொறியியல் துறை புலத்தலைவருக்கும் (Dean) 65 வயதிற்கு பின்னரும் பணிநீட்டிப்பு ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர், அலுவலர் பொது வைப்பு நிதி (GPF), ஓய்வூதிய நிதி ஆகியவை முற்றிலுமாக நிர்வாகச் செலவுகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு ரூ200 கோடி நிதிப்பற்றாக்குறை எனக் கூறப்படுகின்றது. அங்கீகாரமற்ற வகுப்புகள் நடத்துதல், அளவுக்கு அதிகமான மாணவர் சேர்க்கை, ஆசிரியர் அலுவலர் நியமனங்களில் செய்யப்படுகின்ற ஊழல்களையும், வேண்டியவர்களுக்கு மட்டும் பல ஆண்டுகளாக பணிநீட்டிப்பு வழங்கி வருவதையும் கண்டித்து அண்ணாமலைப்பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களும், அலுவலர் சங்கங்களும் இணைந்து கூட்டமைப்பு (JAC) அமைத்து போராடி வருகின்றன. இந்நிலையில் துணைவேந்தரை சந்திக்கச் சென்ற இக்கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் மீது கொலை முயற்சி என்ற பொய் வழக்குகள் போடப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். 79 ஆசிரியர் மற்றும் அலுவலர்களை நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது. அனைத்துத் தோழமைச் சங்கங்களையும் இக்கூட்டமைப்பினர் தொடர்பு கொண்டு ஆதரவு நல்கிட வேண்டியுள்ளனர்.

 

25.07.2010 அன்று சென்னையில் நடைபெற்ற கல்லூரி ஆசிரியர் – அலுவலர் கூட்டு நடவடிக்கைக்குழு (JAC-TANTSAC) கூட்டத்தில் கீழ்க்கண்ட ஆதரவுப் போராட்டங்களை நடத்திடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

(1) தொலைநகலி (FAX) மூலம் தமிழக ஆளுநர், முதல்வர், துணை முதல்வர், உயர்கல்வித் துறை அமைச்சர் மற்றும் உயர்கல்விச் செயலாளர் ஆகியோருக்கு கிளைகளிலிருந்து வேண்டுகோள் அனுப்புவது

அனுப்ப வேண்டிய நாள் : 29.07.2010/30.07.2010

(2) பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

நாள் 07.08.2010 சனிக்கிழமை மாலை 3.00 மணியளவில்

இடம் மெமோரியல் ஹால், சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில், சென்னை.

JAC-TANTSAC உறுப்பினர்கள், மத்திய, மண்டல, கிளைப் பொறுப்பாளர்கள் கலந்து கொள்வது.

 

தொலைநகலி மூலம் அனுப்ப வேண்டிய வேண்டுகோள்:

மாண்புமிகு அய்யா,

வணக்கம். முறையற்ற வகையில் மாணவர் சேர்க்கை, ஊழல் மிகுந்த ஆசிரியர், அலுவலர் நியமனங்கள், பணி ஓய்வு வயதிற்குப் பின்னரும் பணிநீட்டிப்பு ஆணை வழங்கிடல் மற்றும் பொதுவைப்பு நிதி, ஓய்வூதிய நிதி ஆகியவற்றைத் தவறான முறையில் கையாளல் போன்ற முறைகேடுகளை செய்து வருகின்ற அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகத்தினை எதிர்த்து ஜனநாயக முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர், அலுவலர் மீது காவல்துறை பதிவு செய்துள்ள பொய்வழக்குகளைத் திரும்பப் பெறவும், நிர்வாகம் செய்துள்ள தற்காலிக இடைநீக்கத்தை ரத்து செய்யவும், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர் அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பினை அழைத்துப் பேசி நியாயமானத் தீர்வைப் பெற்றுத் தந்திடவும் வேண்டுகிறோம்.

          தங்கள் உண்மையுள்ள     

கிளைச்செயலர்

 

இடம்:

நாள்:                                                                                                                             

தொலைநகலி மூலம்  வேண்டுகோள் அனுப்ப வேண்டிய முகவரி (தொலைநகலி எண்ணுடன்)

1)   மாண்புமிகு டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்     044-24670242

தமிழ்நாடு முதலமைச்சர்                               

செயின்ட் ஜார்ஜ் கோட்டை

சென்னை 9.

2)   மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்                                 044-25676022

தமிழ்நாடு துணை முதலமைச்சர்                        

செயின்ட் ஜார்ஜ் கோட்டை

சென்னை 9.

3)   மாண்புமிகு முனைவர் க.பொன்முடி அவர்கள்                  044-24938002

உயர்கல்வித்துறை அமைச்சர்

தமிழ்நாடு அரசு

செயின்ட் ஜார்ஜ் கோட்டை

சென்னை 9.

4) உயர்திரு க.கணேசன் அவர்கள்                                                    044-25673499

முதன்மைச் செயலர் - உயர்கல்வித்துறை

செயின்ட் ஜார்ஜ் கோட்டை                               

சென்னை 9.                                                                   

5) மேதகு சுர்ஜித் சிங் பர்னாலா அவர்கள்                                     044-22350570

தமிழ்நாடு மாநில ஆளுநர்                         

ஆளுநர் மாளிகை                                     

 

Back