செப்டம்பர் 7இல் நடைபெற உள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு ஜேஏசி-டான்சாக் ஆதரவு

21-08-2010 அன்று திருச்சியில் கூடிய ஜேஏசி-டான்சாக் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் செப்டம்பர் 7இல் நடைபெற உள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக, கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிதல், கல்லூரி வாயில் முன் முழக்கமிடல் மற்றும் மாலையில் சென்னை, கோவை, தஞ்சை, மதுரை, நெல்லை, நாகர்கோவில் ஆகிய மையங்களில் பேரணி நடத்துதல் என இயக்கங்களை நட்த்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

    தமிழகத்திலுள்ள அனைத்து கல்லூரி ஆசிரியர்களும், அலுவலர்களும் இப்போராட்டங்களில் திரளாக கலந்து கொண்டு அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு நமது ஆதரவினை தெரிவித்திட வேண்டும்.

 

கோரிக்கைகள்
  • விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து
  • பொதுத்துறையை தனியார்மயம் ஆக்காதே
  • பொது விநியோக முறையை அனைவருக்கும் விரிவுபடுத்து
  • தொழிலாளர் நலச் சட்டங்களை கறாராக அமல்படுத்து
  • புதிய பென்சன் திட்டத்தினை கைவிடு
  • ஏழை எளிய மக்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கிடு
  • உயர்கல்வியை மையப்படுத்தல், தனியார்மயமாக்கல் மற்றும் வணிகமயமாக்கலை கைவிடு
  • உயர்கல்வியை பாதிக்கும் அனைத்து சட்ட முன்வரைவுகளையும் திரும்ப பெறு
  • கடைநிலை பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களையும் முழுமையாக நிரப்பிடு
Back