Demonstration at Madurai - Against conversion of Government aided colleges into Private Universities


Demaonstration at Kalavasal,Madurai

Vivekanandan, General Secretary-MUTA briefing the Press

Stephen Raj, General Secretary-TANTSAC inagurated the Demonstration

Jeyachandran, Vice President-TNGEA offered felicitations

Rameshkannan, AIIEA offered felicitations

Vivekanandan, General Secretary-MUTA addressed the Public

தமிழக அரசு கடந்த 2008ஆம் ஆண்டு அரசு உதவி பெறும் மதுரை தியாகராசர் கல்வி நிறுவனங்களையும், கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி. கல்வி நிறுவனங்களையும் தனியார்; பல்கலைக்கழகங்களாக மாற்றிட எடு;த்த முயற்சியினை இதுவரை நமது ஒன்றுபட்ட போராட்டங்களால் தடுத்து நிறுத்தி வந்துள்ளோம்.

தற்போது தமிழக அரசு மீண்டும் கடந்த 11.11.2010ஆம் தேதியன்று அரசு உதவிபெறும் கல்லூரிகளைத் தனியார்; பல்கலைக்கழகங்களாக மாற்றும் முடிவினைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட தமிழக சட்ட மன்ற தெரிவுக்குழுவின் கூட்டத்தினைக்கூட்டி தனது முயற்சியினைத் தொடர்கிற செய்தி அறிந்த நமது பொறுப்பாளர்கள் உடனே சட்டமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்;களைச் சந்தித்ததால், 11.11.2010 அன்று நடைபெற்ற சட்டமன்ற தெரிவுக்குழுக் கூட்டத்தில் எந்த ஒரு முடிவும் எடுக்காமல் கூட்டத்தினை ஒத்திவைக்க முடிந்தது. சட்டமன்றத் தெரிவுக்குழுக் கூட்டம் மீண்டும் 14.12.2010 அன்று கூடுவதையொட்டி ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் தொழிற்சங்கத் தோழர்களது எதிர்;ப்பினைத் தெரிவிக்கும் பொருட்டு 09.12.2010 அன்று மாலை 6.00 மணி அளவில் மதுரை காளவாசல் மாப்பிள்ளை விநாயகர்; தியேட்டர் அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மூட்டாவின் இரண்டாம் மண்டலத் தலைவர்; டாக்டர்;.எஸ்.தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தினை தமிழ்நாடு தனியார்; கல்லூரி அலுவலர்; சங்கத்தின் பொதுச்செயலாளர்; திரு.ஆர்;.ஸ்டீபன்ராஜ் துவக்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தினை வாழ்த்தியும் தங்களது அமைப்பின் ஆதரவினைத் தெரிவித்தும், தமிழ்நாடு அரசு ஊழியர்; சங்கத்தின் மாநில துணைத்தலைவர்; திரு.ஜெயச்சந்திரன், சி.ஐ.டி.யு.வின் மதுரை மாவட்டச் செயலாளர்; தோழர்;. தேவராஜன், அகில இந்திய காப்பீட்டு ஊழியர்; சங்கத்தின் பொறுப்பாளர; தோழர்;. ரமேஷ்கண்ணன், தமிழ்நாடு தனியார்; கல்லூரி அலுவலர்; சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலாளர்; திரு.எஸ்.பன்னீர்செல்வம், இந்திய மாணவர்; சங்கத்தின் மாநகர; மாவட்டச் செயலாளர்; தோழர்;. கண்ணன் மற்றும் புறநகர; மாவட்டச் செயலாளர்; தோழர்;.லெனின் ஆகியோர்; உரையாற்றினர்;. மூட்டா பொதுச்செயலாளர; திரு.எஸ்.விவேகானந்தன் ஆர்;ப்பாட்டத்தினை முடித்து வைத்து உரையாற்றினார்;. ஆர்;ப்பாட்ட முடிவில் மூட்டாவின் முதலாம் மண்டலப் பொருளாளர்; டாக்டர்;.எஸ்.ராமசாமி நன்றி கூறினார்;.

 

Back