மூட்டா கோரிக்கை மாநாடு – 27-02-2011 – பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி


மாநாட்டு பேரணியினை துவக்கி வைத்து ஆயுள் காப்பீட்டுக்கழக மண்டலச் செயலாளர்

மன்றத்தலைவரின் தலைமையில் மாநாட்டினைத் துவக்கி வைத்து STFI பொதுச் செயலாளர்

கோரிக்கைகளை விளக்கி மன்றத்தின் பொதுச்செயலாளரும், பொருளாளரும்

மாநாட்டினை வாழ்த்தி மன்றத்தின் முன்னாள் தலைவர்கள்

மாநாட்டுத் தீர்மானங்களை முன்மொழிந்து மன்றத்தின் பொறுப்பாளர்கள்

அய்ஃபக்டோ தலைவரின் மாநாட்டு நிறைவுரை

மத்திய , மாநில அரசுகளால் இதுகாறும் நிறைவேற்றப்படாத கோரிக்கைகள், மற்றும் அரசு உதவி பெறாத கல்லூரிகள் மற்றும் வகுப்புகளில் பணிபுரியும் ஆசிரியர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், விதிமுறைகளை மீறி ஆசிரியர்களைப் பழி வாங்குகின்ற தனியார் கல்லூரி நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் 27-02-2011 ஞாயிற்றுக்கிழமையன்று பாளையங்கோட்டையிலுள்ள தூய யோவான் கல்லூரியில் மூட்டாவின் கோரிக்கை மாநாடு நடைபெற்றது.

கோரிக்கை மாநாட்டினையொட்டி, காலை 10 மணிக்கு பாளையங்கோட்டை தெற்கு பஜாரிலுள்ள லூர்துநாதன் சிலை அருகில் அனைத்திந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் நெல்லை மண்டலச் செயலாளர், திரு. முத்துக்குமாரசாமி அவர்கள் கோரிக்கைப் பேரணியினைத் துவக்கி வைத்து கோரிக்கை மாநாடு வெற்றி பெற வாழ்த்தினார்.

பேரணியின் முடிவில் மூட்டாவின் தலைவர் பேரா. விவேகானந்தன் அவர்கள் தலைமையில் மன்றத்தின் மூன்றாம் மண்டலத் தலைவர் பேரா. நவநீதகிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரையாற்றிட, அகில இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் திரு. ராஜேந்திரன் அவர்கள் கோரிக்கை மாநாட்டினை துவக்கி வைத்து உரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி மூட்டாவின் பொதுச் செயலாளர் பேரா. மனோகர ஜஸ்டஸ் அவர்களும், மூட்டாவின் பொருளாளர் பேரா. சுப்பாராஜூ அவர்களும் உரையாற்ற, மூட்டாவின் முன்னாள் தலைவர்கள் பேரா. அனந்தகிருஷ்ணன் அவர்களும்,  பேரா. பொன்னுராஜ் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள்.

பேரா.முரளி (மூட்டா - இணைப்பொதுச் செயலாளர்), பேரா. முருகேசன் (மூட்டா – துணைத்தலைவர்), பேரா. ஜான்சன் (மூட்டா – துணைத்தலைவர்), பேரா. கணேசன் (மூட்டா – இணைப்பொதுச் செயலாளர்) ஆகியோர் முன்மொழிந்த அனைத்து தீர்மானங்களும் கோரிக்கை மாநாட்டில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

அய்ஃபக்டோ தலைவர் பேரா. ஜேம்ஸ் வில்லியம் அவர்கள் கோரிக்கை மாநாட்டில் நிறைவுரையாற்றிட, மன்றத்தின் மூன்றாம் மண்டலச் செயலாளர் பேரா. இராதாகிருஷ்ணன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

 

MUTA for salary grant to faculty members of self-financing colleges

The Madurai Kamaraj, Manonmaniam Sundaranar University, Mother Teresa and Alagappa University Teachers' Association (MUTA) has urged the State Government to ensure decent salary, job security, and other facilities to the faculty members working in self-financing colleges. A resolution to this effect was adopted in the MUTA's conference that ended in Palayamkottai on Sunday. The conference said the Tamil Nadu Government should give salary grant to teachers working in self-financing colleges and in self-financing courses besides extending other facilities like provident fund, ESI, maternity leave, medical leave.

Fill vacancies

All existing vacancies in the colleges should be filled up.

As recommended by the Centre and the University Grants Commission, house rent allowance, daily allowance, education allowance, travelling allowance should be given to college teachers and salary arrears should be given in one instalment.

Teachers who have put in 20 years of service should be made eligible for getting full pension, they insisted.

While the retirement age for college teachers should be increased to 65, the government should do away with the contributory pension scheme and instead, the scheme, which was in practice before April 1, 2003 should be revived.

All colleges being run by Manonmaniam Sundaranar University, Madurai Kamaraj University and Mother Teresa University should be converted into government colleges and timescale should be given to faculty members working in these colleges.

On its part, the Centre should allocate six per cent of the GDP for education and the bill favouring the foreign educational institutions to have their branches in the country should be withdrawn without any hesitation.

After taking out a rally from Lourdhunathan Statue, the conference was organised at St. John's College in Palayamkottai, where A. James Williams, President, AIFUCTO, spoke.

 

 

http://www.hindu.com/2011/03/01/stories/2011030159980500.htm

 

 

Note

This News is with an attachment file.


Back