ஜூலை13 - பேரா.சண்முகசுந்தரம் நினைவுநாள் கருத்தரங்கம்


பேரா.சின்னசாமி மனோகரன் மூட்டா கொடியேற்றினார்

பேரா.விவேகானந்தன் தலைமையில் பேரா.சண்முகசுந்தரம் நினைவு சொற்பொழிவு

பேரா.சண்முகசுந்தரம் நினைவு நாள் சொற்பொழிவு

பேரா.தேன்பாண்டியன் வரவேற்புரையுடன் சமச்சீர் கல்வி கருத்தரங்கம்

சமச்சீர் கல்வி குறித்து பேரா.ராஜமாணிக்கம் கருத்துரை

கருத்தரங்கில் இயக்கத் தோழர்களின் பங்கேற்பு

13-07-2011 மாலை 05.30 மணியளவில் மதுரை மூட்டா அலுவலகத்தில் மூட்டா தலைவர் பேரா.விவேகானந்தன் அவர்கள் தலைமையில் மூட்டாவின் முன்னாள் பொருளாளர் பேரா.சின்னசாமி மனோகரன், மூட்டா கொடியினை ஏற்றி பேரா.சண்முகசுந்தரம் அவர்களின் நினைவு நாள் சொற்பொழிவினை ஆற்றினார். பேரா.சண்முகசுந்தரம் அவர்களின் போராட்ட குணம் குறித்தும், அவரோடு சங்கப் பணியாற்றிய நாட்கள் குறித்தும் தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட பேரா.சின்னசாமி மனோகரன், தற்போதைய சூழலில் மூட்டா தனக்கேயுரிய போராட்ட குணத்துடன் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியதின் அவசியத்தினையும் சுட்டிக் காட்டினார்.

பேரா.சண்முகசுந்தரம் அவர்களின் நினைவு நாளினையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு கருத்தரங்கில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னோடியும், மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் பணி புரிந்து ஓய்வு பெற்ற நமது மன்றத்தின் முன்னணி போராளியுமான பேரா. ராஜமாணிக்கம் சமச்சீர் கல்வி குறித்து கருத்துரை ஆற்றினார். அடிமைத்தளையிலிருந்து விடுபட்ட வரலாறு தெரியாமல் போனால் வெகு விரைவில் மீண்டும் மோசமான அடிமைகளாக்கப்படுவோம் என்று இயக்க உணர்வுடன் ஆரம்பித்த அவர் உரையில் சமச்சீர் கல்வியின் நோக்கம், தேவை குறித்தும் தற்போது எழுந்துள்ள பிரச்சனைகள், எதிர் கொள்ள வேண்டிய கடமைகள் குறித்தும் விளக்கினார். கல்வி உரிமை சட்டத்தினை அமல்படுத்தல் மற்றும் தனியார் பள்ளி கல்வி கட்டணம் ஆகிய பிரச்சனைகளுடன் சமச்சீர் கல்வி குறித்த பிரச்சனையை அணுக வேண்டும் என மன்ற உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார். இரண்டாம் மண்டலச் செயலாளர் தேன்பாண்டியன் வரவேற்புரையாற்றிட, மண்டலத்தின் செயலாளர் பேரா.கல்யாணராமன் நன்றியுரை வழங்கினார்.

Back