21-07-2011 அன்று பணி மேம்பாடு கோரி தமிழக முதல்வருக்கு ஜே.ஏ.சி சார்பில் கையெழுத்து இயக்கம்

புதிய ஊதிய விகிதம் அமல்படுத்தப்பட்ட 2009 செப்டம்பருக்குப்பின் பணிமேம்பாட்டினை அடைந்திட்ட ஆசிரியர்களுக்கு இதுகாறும் பணிமேம்பாடு வழங்கப்படாத சூழலில், பல்கலைக்கழக மானியக் குழுவின் நெறிமுறைகள் தமிழக அரசு இதழில் வெளியிடப்படும் நாள் வரையிலான இடைப்பட்ட காலத்தில், அனைத்து ஆசிரியர்களுக்கும் உரிய பணிமேம்பாட்டினையும், தேர்வுநிலை விரிவுரையாளராக மூன்றாண்டுகள் பணிமுடித்த ஆசிரியர்களுக்கு இணைப்பேராசிரியர் பணிமேம்பாட்டினையும் நடைமுறையிலுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் உடனடியாக வழங்கிட வேண்டி  தமிழக முதல்வர் அவர்களுக்கு 21-07-2011 அன்று கடிதம் மூலமாக வேண்டுகோள் விடுப்பது என ஜே.ஏ.சி. முடிவாற்றியுள்ளது.

இத்துடன் உள்ள கடிதத்தினை தரவிறக்கம் செய்து கிளை உறுப்பினர்களிடம் கையெழுத்தினைப் பெற்று தமிழக முதல்வருக்கும் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கும், உயர் கல்வித் துறைச் செயலாளர் அவர்களுக்கும்   21-07-2011 அன்று அனுப்பி வைக்குமாறு கிளைச் செயலாளர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

Note

This News is with an attachment file.


Back