மதுரை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநரிடம் மூட்டா பெருந்திரள் முறையீடு







மூட்டா முதலாம் மண்டலம் மற்றும் இரண்டாம் மண்டலங்களின் ஒருங்கிணைந்த மண்டலச் செயற்குழு முடிவின்படி பெருந்திரள் முறையீடு செய்திட 18.07.2011 திங்கள் மாலை மதுரை மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தில் மூட்டா முதலாம் மண்டலம் மற்றும் இரண்டாம் மண்டலங்களைச் சார்ந்த பெரும்பான்மையான கல்லூரிகளிலிருந்து சுமார் 150 உறுப்பினர்கள் திரண்டனர். மூட்டா தலைவர் ச.விவேகானந்தன், மண்டலத்தலைவர்கள் முரளி மற்றும் தேன்பாண்டியன், மண்டலச் செயலாளர்கள் செந்தாமரைக்கண்ணன் மற்றும் கல்யாணராமன், மண்டலப் பொருளாளர்கள் எழில் மற்றும் கோவிந்தராஜன் மற்றும் மத்திய செயற்குழு உறுப்பினர் சந்திரகுரு ஆகியோர் தலைமையில் மதுரை மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநரிடம் நிலுவையிலுள்ள கோரிக்கைகளைத் தீர்த்து வைக்க கோரி மனு அளிக்கப்பட்டது. கல்லூரிக் கிளைகளிலிருந்தும் தனித்தனியாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மனுக்கள் மீது வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதிக்குள் முடிவு தெரிவிப்பதாக மண்டலக் கல்லூரிக்கல்வி இணை இயக்குநர்(பொ) திருமதி.பொன்னாத்தாள் அவர்கள் உறுதி அளித்துள்ளார்.

Back