PFRDA மசோதா எதிர்ப்புக் கருத்தரங்கம் - 26-09-2011 அன்று சென்னை சின்னமலையில் உள்ள செயிண்ட் தாமஸ் கம்யூனிட்டி ஹாலில் - மாலை 2 மணிக்கு

PFRDA மசோதா எதிர்ப்புக் குழு

தமிழ்நாடு

 

NEW PENSION SCHEME

NO PENSION SCHEME

தோழர்களே.

            மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அரசுப் பணிகளை மேற்கொண்டதன் காரணமே, வேலைக்குப் பாதுகாப்பு உண்டு, பணியிலிருந்து ஓய்வு பெற்றால் ஓய்வூதியம் உண்டு என்பதுதான். ஆனால் இன்று பணிப்பாதுகாப்பும், ஓய்வூதியமும் இல்லாமல் போகும் ஆபத்து உருவாகி உள்ளது.

            இந்திய நாட்டின் அரசியல் சட்டம் முதியோருக்கு ஓய்வூதியம் அளிப்பதை வழிகாட்டும் நெறிமுறையாக ஏற்றுக் கொண்டுள்ளது. உச்சநீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பிலும் ‘ஓய்வூதியம் என்பது பிச்சைக்காரன் தட்டில் போடப்படும் பிச்சைக்காசு அல்ல. ஒவ்வொரு ஊழியனின் சட்டப்படியான உரிமை’ என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. பல்வேறு அணி திரட்டப்படாத துறைகளில் பணி புரியும் படிக்காத பாமரர்களுக்கும் மத்திய அரசும், மாநில அரசுகளும் ஓய்வூதிய திட்டத்தை விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களாகவே தங்களுடைய ஓய்வூதியத்தை உயர்த்திக் கொள்கிறார்கள்.

            ஆனால் முப்பது வருடம், முப்பத்தி ஐந்து வருடம் என்று உழைத்து ஓடாய்த் தேய்ந்த  மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு இனி ஓய்வூதியம் கிடைக்குமா?

            தோழர்களே, பா.ஜ.க. தலைமையிலான NDA அரசாங்கம் 2002ல் புதிய ஓய்வூதிய திட்ட மசோதாவை நாடாளூமன்றத்தில் அறிமுகம் செய்தது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பினால் மசோதா நாடாளூமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. நிலைக் குழுவிலும் மத்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனங்களும், இரயில்வே ஊழியர் மற்றும் பாதுகாப்பு ஊழியர் சம்மேளனங்களும் இந்த திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

            2004ல் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் தலைமையிலான UPA-I மீண்டும் நாடாளுமன்றத்தில் ஓய்வூதிய மசோதாவை அறிமுகப்படுத்தியது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பின் காரணமாக நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்படவில்லை. எனவே, அன்றைய நிதி அமைச்சர் திரு.ப.சிதம்பரம் அவர்கள் முதலமைச்சர்களின் மாநாட்டைக் கூட்டி, அந்த மாநாட்டின் முடிவாக ஒரு Executive Orderஐப் போட்டு 1-1-2004 முதல் பணியில் சேரும் மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய பென்ன் திட்டம் அமல்படுத்தப்பட்டு விட்டது.

            இந்த புதிய ஓய்வூதிய மசோதாவின்படி, ஊழியர்களிடமிருந்து 10% ஊதியம், பஞ்சப்படி பிடிக்கப்படும். மற்றும் அரசு தன் பங்காக 10% வழங்கும். அரசு, ஊழியர் பங்களிப்பு இரண்டும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும். இதை நிர்வகிப்பதற்கென்று ஒரு நிதி மேலாளரும், உறுப்பினரும் நியமிக்கப்படுவார்கள். அதன்படி, 1. SBI Funds Pvt.Ltd. 2.UTI Retirement Solutions  3. LIC Pension Fund Pvt. Ltd. ஆகிய நிறுவனங்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணத்தைப் பராமரிப்பதற்கென்று National Securities and Depositories Limited நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.

            இதில் போடப்படும் பணத்திற்கும் அதன் வருமானத்திற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. இந்த PFRDA Billல் Section 20(f) படி நம்முடைய ஓய்வூதியத்திற்கு எந்த ஒரு implicit மற்றும் explicit உத்தரவாதம் இல்லை என்றும், சந்தைதான் அதை நிர்ணயிக்கும் என்றும் கூறியுள்ளது. அதாவது பங்குச் சந்தையில் இலாபம் ஈட்டினால் ஒரு வேளை ஓய்வூதியம் கிடைக்கலாம். மேலும் இந்தத் திட்டத்தில் சேர்ந்தவர்கள் ஓய்வு பெறும் போது, தான் சேர்த்த 60%ஐ மட்டுமே கையில் பெற முடியும். மீதமுள்ள 40%த்தை பங்குச் சந்தையில் கட்டாயம் முதலீடு செய்ய வேண்டும். VRSல் செல்வோர் 20%த்தைக் கட்டாயம் முதலீடு செய்ய வேண்டும். இப்படி முதலீடு செய்யும் பணத்தின் வருமானத்திற்கு எந்த  ஒரு உத்தரவாதமும் கிடையாது. ஒரு வேளை முதலீடு செய்த பிறகு இறந்து போனால், போட்ட பணமும் கிடைக்காது. குடும்ப ஓய்வூதியமும் கிடையாது. பணத்தை சேமித்து வைத்து விட்டு ஒருவர் இறந்து போனால், அந்தப் பணம் அவருடைய குடும்ப வாரிசுகளுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பது இந்திய திருநாட்டின் சட்டம். ஆனால், இந்தத் திட்டத்திற்கு இந்த சட்டம் பொருந்தாதாம். நாம் வாங்கிக் கொண்டிருக்கும் ஓய்வூதியத் திட்டத்தின் பெயர் Defined Benefit Scheme. இந்தத் திட்டத்தில் என்ன ஓய்வூதியம் கொடுக்கப்படும் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டமான Defined Contribution Schemeல் சம்பளத்தில் எவ்வளவு பிடிக்கப்படும் என்று மட்டும் கூறப்பட்டுள்ளது.

            நண்பர்களே, தோழர்களே, இப்போது சொல்லுங்கள். இது  New Pension Schemeமா? அல்லது  No Pension Schemeமா? எனவே இதை முறியடிக்க ஊழியர்களை அணி திரட்டவும், மக்களின் ஆதரவைத் திரட்டவும் ஒரு புதிய ஒற்றுமை உருவாகியுள்ளது. ரயில்வேயில் உள்ள  SRMU, DREU, Loco Running Staff, ICF Workers union, பாதுகாப்புத் துறையில் உள்ள AIDF, BSNL ஊழியர் சங்கங்கள், Confederation, தமிழ்நாட்டிலுள்ள அரசு ஊழியர் இயக்கங்களான TNGEA, TNGEU, Secretariat Employees Union, தமிழ்நாடு அனைத்துப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு,  AUT, MUTA, GCTA உள்ளிட்ட கல்லூரி ஆசிரியர்கள் அமைப்புகள், பல ஓய்வூதியம் பெறுவோர் அமைப்புகள் ஒன்று சேர்ந்து 10-09-2011 அன்று PFDRA மசோதா எதிர்ப்புக் குழு ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். அதன் தலைவராக SRMU தலைவர் தோழர் C.A. இராஜா ஸ்ரீதர் மற்றும் தோழர் M. துரைப்பாண்டியன் அவர்களை Convenor ஆகவும், அனைத்து சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் இணை கன்வீனர்களாகவும் செயல்படுவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

            வரும் 26-09-2011 அன்று மாலை 2 மணிக்கு சென்னை சின்னமலையில் உள்ள செயிண்ட் தாமஸ் கம்யூனிட்டி ஹாலில் PFRDA மசோதா எதிர்ப்புக் கருத்தரங்கம் நடைபெறும். அதன்பின் தமிழக ஆளுநரைச் சந்தித்து மனு வழங்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை இந்த மழைக்காலக் கூட்டத் தொடரிலேயே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதை முறியடிக்கும் விதமாக அன்றைய தினமே இந்த மசோதாவுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தைத் தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

            தோழர்களே, நம்முடைய ஓய்வூதியத்தைப் பாதுகாக்க ஓரணியில் அணி திரள்வோம். புதிய ஒற்றுமையை மேலெடுத்துச் சென்று மேலும் பல வெற்றிகளைக் குவிப்போம்.

 

தோழமையுடன்

 C.A. இராஜா ஸ்ரீதர்                                                                                     M. துரைப்பாண்டியன்

தலைவர்                                                                                                                     கன்வீனர்

Back