DCE Proceedings – Ph.D. incentive for inter-disciplinary subjects sanctioned-Orders issued

சென்னை-6, கல்லூரிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்

முன்னிலை: முனைவர்.(திருமதி).த.செந்தமிழ்ச்செல்வி, எம்.எஸ்.ஸி.,எம்.ஃபில்,பி.எச்டி

 

ந.க.எண் 1321/ஜெ1/2012 நாள்: 01-02-2013

 

பொருள்: கல்லூரிக் கல்வித் துறை- சார்புடைய பாடங்களில் (Inter-discipline) Ph.D. முடித்தவர்களுக்கும், Ph.D.  ஊக்க ஊதிய உயர்வுகள் வழங்க கோருதல் - ஆணைகள் வழங்குதல் சார்பு.

 

பார்வை: அரசு கடிதம் எண். 4912/எப்1/2012-2 நாள் 03.04.2012

 

அரசாணை (நிலை) எண். 350 உயர்கல்வி நாள் 09.09.2009ல் புதிய பல்கலைக்கழகமான்யக்குழு ஊதிய விகிதங்கள் அமலாக்கப்பட்டதை தொடர்ந்து சார்புடைய பாடங்களில் (Inter-discipline) Ph.D.முடித்தவர்களுக்கும் Ph.D.ஊக்க ஊதிய உயர்வை வழங்க கோரி கல்லூரி ஆசிரியர் சங்கங்களிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வரப்பெற்றன.

அரசாணை (நிலை) எண். 350 உயர்கல்வி நாள் 09.09.2009-ன்படி சார்ந்த பாடப்பிரிவில் (Relevant discipline) பி.எச்டி பட்டம் பெற்றிருந்தால் மட்டுமே ஊக்க ஊதிய உயர்வு பெற ஆசிரியர்கள் தகுதி பெறுவார்கள்.

எனினும், அரசாணை (நிலை) எண். 125 உயர்கல்விதுறை நாள் 16.10.2006-ன்படி சார்புடைய பாடங்களில் (Inter-discipline) பி.எச்டி முடித்தவர்களுக்கும் ஊக்க ஊதிய உயர்வுகள் வழங்கலாம் என தெளிவுரைகள் வழங்கப்பட்டன. இப்பாடங்களில் ஏதும் சந்தேகம் ஏற்படின், அதன் தொடர்பாக சார்ந்த பல்கலைக்கழகத்தை அணுகி தெளிவுரை கோரலாம் எனவும் ஆணையிடப்பட்டது.

இதனடிப்படையில், அரசாணை (நிலை) எண். 125 உயர்கல்விதுறை நாள் 16.10.2006 வழங்கப்பட்டுள்ளது. இரு வேறு பாடப்பிரிவுகள் உள்ளடக்கிய பாடப் பிரிவில் (Inter-disciplinary subjects)  ஆய்வுப் பட்டம் பெற்றவர்களுக்கும் ஊக்க ஊதிய உயர்வுகள் வழங்கலாம் என ஆணையிடலாகிறது. இப்பாடப்பிரிவுகள் சார்புடைய பாடப்பிரிவுகள என்பதில் சந்தேகம் ஏற்படின் மேற்குறித்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டவாறு சார்ந்த பல்கலைக் கழகத்தை அணுகி தெளிவுரை பெறுமாறும் தெரிவிக்கலாகிறது.

இச்செயல் முறைகளை பெற்றுக் கொண்டமைக்கான பெறல் ஏற்பினை தவறாது அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கலாகிறது.

 

 

கல்லூரிக் கல்வி இயக்குநர்

பெறுநர்

 

1.     மண்டல கல்லூரி இணை இயக்குநர்கள்

அனைத்து மண்டலங்கள்

2.     அரசு கல்லூரி முதல்வர்கள் அனைவரும்

3.     இயக்க சி,டி,ஜி,எப் மற்றும் ஐ- பிரிவுகள்

Note

This News is with an attachment file.


Back