DCE Proceedings – CAS from 01.01.1996 and fixation of Rs.14940 - Orders issued

சென்னை-6, கல்லூரிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்

முன்னிலை: முனைவர்.(திருமதி).த.செந்தமிழ்ச்செல்வி, எம்.எஸ்.ஸி.,எம்.ஃபில்,பி.எச்டி

 

ந.க.எண் 1321/ஜெ1/2012-2 நாள்: 07-02-2013

 

பொருள்: கல்லூரிக் கல்விப் பணி – 01.01.96 முதல் பல்கலைக்கழக மானிய குழு ஊதிய விகித அமலாக்கம் – பணி மேம்பாடு தேதியினை 27.07.1998 முதல் வழங்கப்பட்டதற்கு பதிலாக 01.01.1996 என நிர்ணயித்து ரூ.14940/- என உயர் ஊதியம் நிர்ணயித்தல் – ஆணைகள் வழங்குதல் – சார்பு.

 

பார்வை: அரசு கடிதம் எண். 4912/எப்1/2012-2 நாள் 03.04.2012

 

01.01.1996 முதலே அரசாணை எண்.111ஐ அமல்படுத்தி 9,10.11 ஆண்டுகளில், கூடுதல் பணிக்காலத்திற்கான மிகை ஊதிய உயர்வுடன் (Bunching) கூடிய தேர்வு நிலை (SG) நிர்ணயம் செய்து, தேர்வு நிலையில் 5 ஆண்டுகள் பணி முடித்த அனைவருக்கும் ரூ.14940/- உயர் ஊதியம் வழங்க ஆணைகள் வழங்கப்பட வேண்டும் என கல்லூரி ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து, அக்கோரிக்கை நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்துள்ளது. இக்கோரிக்கை, கல்லூரி கல்வி இயக்குநரால் கவனமுடன் பரிசீலிக்கப்பட்டது.

01.01.1986 முதல் பல்கலைக்கழக மான்யக்குழு திருத்திய ஊதிய விகிதத்தை செயல்படுத்த வழங்கப்பட்டுள்ள அரசாணை (நிலை) எண். 1785 கல்வி நாள் 05.12.1988ன்படி, எம்பில்/பிஎச்டி இல்லாமல் 8 வருடங்களில் முதுநிலையும், முதுநிலையில் 08 வருடங்கள் முடிக்கும் நிலையில் தேர்வு நிலையும் ஆசிரியர்களுக்கு வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது.

01.01.1996 முதல் பல்கலைக்கழக மான்யக்குழு திருத்திய ஊதிய விகிதத்தை செயல்படுத்த வழங்கப்பட்டுள்ள அரசாண (நிலை) எண். 111 உயர்கல்வி நாள் 24.03.1999ன்படி, எம்பில்/பிஎச்டி இல்லாமல் 6 வருடங்களில் முதுநிலையும், முதுநிலையில் 05 வருடங்கள் முடிக்கும் நிலையில் தேர்வு நிலையும் ஆசிரியர்களுக்கு வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது.

பணியில் இளையவர் பணியில் மூத்தவரின் ஊதிய நிலையினை 11ஆண்டுகளில் அடைந்து அவரை விட கூடுதலாக ஊதியம் பெறுகின்றனர் என்றும், 1980-முதல் 1987 வரையிலான காலக் கட்டத்தில் பணியில் சேர்ந்த மூத்தோர் 1987க்குப் பின்னர் பணியில் சேர்ந்த இளையோரைக் காட்டிலும் குறைவான ஊதியம் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முரண்பாட்டினை களையும் பொருட்டு பின்வரும் ஆணைகள் வழங்கப்படுகிறது.

01.01.1996 முதல் பல்கலைக்கழக மான்யக்குழு திருத்திய ஊதியத்தினை செயல்படுத்தி பணி மேம்பாடு வழங்கும் போது, பணி மேம்பாடு வழங்குவதற்கான குறித்த தேதி (Crucial date) 27.07.1998 என்பதற்கு பதிலாக 01.01.1996 தேதிக்கு முன் கொண்டு சென்று செயல்படுத்த ஆணை வழங்கலாகிறது. இதன் மூலம் 01.01.1996 முதல் 9,10,11 ஆண்டுகளில் கூடுதல் பணிக்காலத்திற்கான ஊதிய உயர்வுடன் (Bunching) கூடிய தேர்வு நிலை (Selection Grade) நிர்ணயம் செய்து தேர்வு நிலையில் ஐந்து ஆண்டுகள் பணி நிறைவு செய்த அனைவருக்கும் ரூ.14940/- உயர் துவக்க ஊதியம் வழங்க ஆனை வழங்கலாகிறது.

இவ்வாறு திருத்தப்பட்ட ஊதிய நிர்ணயத்தின் அடிப்படையில் 01.01.2006 முதல் வழங்கப்பட்ட (அரசாணை எண் 350 நாள் 09.09.2009) ஊதிய விகிதத்தையும் திருத்தியமைக்க ஆணைகள் வழங்கப்படுகிறது.

இச்செயல் முறைகளை பெற்றுக் கொண்டமைக்கான பெறல் ஏற்பினை தவறாது அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கலாகிறது.

 

 

கல்லூரிக் கல்வி இயக்குநர்

பெறுநர்

 

1.     மண்டல கல்லூரி இணை இயக்குநர்கள் அனைத்து மண்டலங்கள்

2.     அனைத்து அரசு கல்லூரி முதல்வர்கள்

3.     மாநில கணக்காளர், சென்னை – 600 018

4.     இயக்கக சி,டி,ஜி,எப் மற்றும் ஐ- பிரிவுகள்

Note

This News is with an attachment file.


Back