48 மணி நேர அகில இந்திய தொடர் வேலை நிறுத்தம் - பிப்ரவரி 20,21-2013 - கலந்து கொள்ள வாரீர் - கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழு - டான்சாக் அறைகூவல்

பிப்ரவரி 20, 21 இரு நாட்கள் அகில இந்திய வேலை நிறுத்தம்

கல்லூரி ஆசிரியர்-அலுவலர் கூட்டு நடவடிக்கை குழு (JAC-TANTSAC)

அன்புடையீர்,

வணக்கம். 1991-ம் ஆண்டிற்குப் பிறகு கொண்டுவரப்பட்ட மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கை அனைத்து தரப்பு மக்களையும், நேரடியாகவும், மறைமுகமாகவும் அவர்களுடைய வாழ்வாதாரத்தைச் சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். இதுகுறித்து மத்திய அளவிலான அனைத்துத் தொழிற்சங்கங்களும் இதனை எதிர்த்து நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டங்களை பலமுறை நடத்திய பிறகும், மத்திய அரசு பாராமுகமாக இருப்பதைக் கண்டித்து, கட்சி சார்பற்ற முறையிலே, நாடு முழுவதும் உள்ள 11 மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள், வங்கி, காப்பீட்டுத் துறை, போக்குவரத்துத் துறை, மின் வாரியம் போன்ற துறைகள் இணைந்து பிப்ரவரி 20 மற்றும் 21 ஆகிய இரண்டு நாட்கள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய முடிவெடுத்துள்ளனர். இதனை ஆதரித்து, அகில இந்திய பல்கலைக்கழக, மற்றும் கல்லூரி ஆசிரியர் கூட்டமைப்பு (AIFUCTO) மற்றும் தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு (JAC) அந்த இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்கிறது.

கோரிக்கைகள்

§   புதிய ஓய்வூதியக் கொள்கையைக் கைவிட்டு வரையறுக்கப்பட்ட பழைய ஓய்வூதியத்தை அமுல்படுத்த வேண்டும்.

§   விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்.

§   வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

§   அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும். தேசிய சமூக பாதுகாப்பு நிதியம் ஒன்றை உருவாக்க வேண்டும்.

§   மத்திய/மாநில பொதுத்துறை நிறுவன்ங்களை பாதுகாக்க வேண்டும். Disinvestment என்ற பெயரில் அவற்றை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது.

§   தொழிலாளர் நலச்சட்டங்களை உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

§   நிரந்தர பணியிடங்களில் ஒப்பந்த முறை கைவிடப்பட வேண்டும்.

§   போனஸ், வைப்புநிதி ஆகியவற்றிற்கான உச்ச வரம்புகளை நீக்க்க வேண்டும். பணிக்கொடைத்தொகை உயர்த்தப்பட வேண்டும்.

§   அனைத்து துறைகளிலும் தொழிற்சங்கங்கள் அமைக்கும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.

§   உயர்கல்வியை பாதிக்கக்கூடிய அனைத்து மசோதாக்களையும் கைவிட வேண்டும்.

§   சுயநிதி கல்லூரிகள் அரசு மற்றும் உதவிபெறும் கல்லூரிகளில் பணிபுரியும் ஒப்பந்த அடிப்படை/கௌரவ ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 25,000/- வழங்கிட வேண்டும்.

§   சுயநிதி கல்லூரிகள் அரசு மற்றும் உதவிபெறும் கல்லூரிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அலுவலருக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 10,000/- வழங்கிட வேண்டும்.

§   அரசு உதவி பெறும் மற்றும் அரசு கல்லூரிகளிலுள்ள ஆசிரியர்/ஆசிரியரல்லாப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிடவேண்டும்.

§   UGC பரிந்துரையின்படி கல்லூரி ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதினை 65-ஆக உயர்த்திட வேண்டும்.

§   தமிழகத்திலுள்ள பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்ற வேண்டும்.

§   சுயநிதி, கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்கான குழு அமைத்திட வேண்டும்.

§   ஆறாவது ஊதியக் கமிஷன் பரிந்துரைக்குப் பின் திருத்தப்பட்ட ஊதியத்திலுள்ள குறைபாடுகளைக் களைய அமைக்கப்பட்ட மூவர் குழு பரிந்துரைகளைப் பெற்று, ஊழியர் சங்கங்களை அழைத்துப் பேசி ஊதிய முரண்பாடுகளைக் களைந்திட வேண்டும்.

§   மத்திய அரசு ஊழியருக்கு இணையான வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டு படி, போக்குவரத்து படி உள்ளிட்ட அனைத்து படிகளையும் வழங்குவதுடன், 50% அகவிலைப்படியினை அடிப்படை ஊதியத்துடன் இணைத்திட வேண்டும்.

மாணவர்களே, பெற்றோர்களே, பொது மக்களே ஆதரவு தாரீர்!

இவண்

கல்லூரி ஆசிரியர்-அலுவலர் கூட்டு நடவடிக்கை குழு

Back