2013 பிப்ரவரி 20,21-அகில இந்திய இரு நாள் வேலை நிறுத்தம்-மதுரையில் கல்லூரி ஆசிரியர் அலுவலர்கள் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம்


பேரா.கல்யாணராமன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

டான்சாக் கனகராசன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து உரை

வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி எழுச்சி உரை

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கல்லூரி ஆசிரியர் அலுவலர்கள்

 

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல், ஆசிரியர் அலுவலர் காலிப் பணியிடங்களை நிரப்புதல், புதிய பென்சன் திட்டத்தை இரத்து செய்தல் உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கல்லூரி ஆசிரியர்-அலுவலர் கூட்டு நடவடிக்கைக் குழு  சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றுகின்ற ஆசிரியர்கள் அலுவலர்கள் பிப்ரவரி 20,21 ஆகிய இருநாட்களிலும் நடைபெற்ற அகில இந்திய வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.  மதுரை மண்டலத்தில் 1150 ஆசிரியர்கள் அலுவலர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தத்திலும் பங்கேற்று அந்தந்த கல்லூரி வாயில் முன்பாக கோரிக்கை முழக்கப் போராட்டம் நடத்தினர்.

அதன் தொடர்ச்சியாக, 21.02.2013 மாலை 5.30 மணியளவில் மதுரை அண்ணா பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலை அருகில் வேலை நிறுத்தத்தை  ஆதரித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. JAC-TANTSAC அமைப்பின் மதுரை மண்டல போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்களான தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மதுரை மண்டலச் செயலாளர் போராசிரியர் மா.மணிமாறன், மூட்டா இரண்டாம் மண்டலச் செயலாளர் போராசிரியர் சி.கல்யாணராமன், தமிழ்நாடு தனியார் கல்லூரி அலுவலர் சங்கத்தின் மதுரை மண்டலச் செயலாளர் பா.மனோகரன் ஆகியோரது கூட்டுத் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

தமிழ்நாடு தனியார் கல்லூரி அலுவலர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.கனகராசன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார்.  சி.ஐ.டி.யு மாநிலக்குழு உறுப்பினர் சி.சுப்பையா, தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் பேராசிரியர் சுரேஷ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.நடராசன், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் மதுரை கோட்ட இணைச்செயலாளர் ஜெ.விஜயா, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மூட்டா ஆர்.கிருஷ்ணமூர்த்திதமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொருளாளர் பேராசிரியர் பி.செல்லராஜா, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் டி.முருகன், மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆசிரியர் பேரவையின் சார்பில் பேராசிரியர் புஷ்பராஜ், தமிழ்நாடு ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டத் தலைவர் முனைவர். டி.என்.கோகுல்நாத்பாபு, தமிழ்நாடு ஓய்வு பெற்ற  கல்லூரி அலுவலர் சங்கத்தின் மண்டல அமைப்பாளர் பி.மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மூட்டா தலைவர் பேராசிரியர் ச.விவேகானந்தன் சிறப்புரையாற்றினார். மூட்டா இரண்டாம் மண்டலத் தலைவர் முனைவர் என்.தேன்பாண்டியன் நன்றி உரையாற்றினார்.

Back