பேரா.வெ.சண்முகசுந்தரம் நினைவு நாள் 13-07-2013 - மூட்டா முப்பெரும் விழா – புதுப்பிக்கப்பட்ட மதுரை மூட்டா அலுவலகம் திறப்பு, மூட்டா மின் இதழ் துவக்கம், உணவு பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம்


பேரா.ஜெயபாலன் மூட்டா கொடியேற்றினார்

பேரா.விஜயகுமார் புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தை திறந்தார்

கருத்தரங்க மேடையில் பொறுப்பாளர்கள்

விழாவில் கலந்து கொண்ட உறுப்பினர்கள்

மூட்டா மின் இதழ் துவக்கம்

பேரா.ஆத்ரேயா அவர்களின் கருத்தரங்க சிறப்புரை

மூட்டாவின் முன்னாள் தலைவர் பேராசிரியர்.வெ.சண்முகசுந்தரம் நினைவுநாள் கருத்தரங்கம், புதுப்பிக்கப்பட்ட மதுரை மூட்டா அலுவலக திறப்பு மற்றும் மூட்டா மின் இதழ் துவக்கம் ஆகிய நிகழ்வுகள் முப்பெரும் விழாவாக மதுரை மூட்டா அலுவலகத்தில் நடத்தப்பட்டது.

மூட்டா கொடியினை ஏற்றி வைத் போடிநாயக்கனூர் ஏல விவசாயிகள் சங்க கல்லூரியில் பணி புரிந்து ஓய்வுபெற்ற பேராசிரியர்.R.ஜெயபாலன், பேரா.வெ.சண்முகசுந்தரம் அவர்களது மூட்டா பேரியக்கம் சார்ந்த போராட்ட நடவடிக்கைகளை நினைவு கூர்ந்து, அவர் வழி போராட  இளைய   சமூகத்திற்கான   ழைப்பினை விடுத்தார்.

மூட்டாவின் முன்னாள் பொதுச்செயலாளர் மற்றும் இதழாசிரியருமான பேரா.P.விஜயகுமார்   புதுப்பிக்கப்பட்ட மூட்டா  கட்டிடத்தைத் திறந்து வைத்து உரையாற்றும் போது, மதுரையிலுள்ள அனைத்து உழைக்கும் வர்க்க மக்களும் பயன்படுத்தும் இடமாகத் திகழும் மூட்டா அலுவலகம் தனது எல்லைகளை இன்னும் விரிவுபடுத்தி பயன்படுத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மூட்டாவின் தலைவர் பேரா.T.மனோகர ஜஸ்டஸ் தலைமையில் நடந்த இவ்விழாவில் இணைப்பொதுச்செயலாளர் பேரா.N.தேன்பாண்டியன் வரவேற்புரை நிகழ்த், பொதுச்செயலாளர் பேரா.S.சுப்பாராஜூ அறிமுகவுரை நிகழ்த்தினார். அகில இந்திய பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் துணைத்தலைவர் பேரா.S.விவேகானந்தன் வாழ்த்துரை வழங்கினார்.

சென்னை எம்.எஸ்.சுவாமிநாதன் பவுண்டேசன் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநரும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை முன்னாள் தலைவருமான பேரா.வெங்கடேஷ் B ஆத்ரேயா அவர்கள் மூட்டா மின் இதழினைத் துவக்கி வைத்து, “உணவுப் பாதுகாப்பு” என்ற தலைப்பில் பேராசிரியர்.வெ.சண்முகசுந்தரம் நினைவுநாள் கருத்தரங்க சிறப்புரையினை வழங்கினார்.
மூட்டாவின் பொருளாளர் பேரா.
R.பாண்டி நன்றியுரை நிகழ்த்த விழா நிறைவு பெற்றது.

Note

This News is with an attachment file.


Back