மாணவர் சேர்க்கையின் பொழுது தகுதியுள்ள ஆதி திராவிடர்/பழங்குடியினர்/மதம் மாறிய கிறித்துவ ஆதி திராவிட மாணவர்களிடமிருந்து கண்டிப்பாக கல்விக் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது – பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு கல்லூரிக் க்ல்வி இயக்குநர் அறிவுறுத்தல்

கல்லூரிக் கல்வித்துறை

 

அனுப்புநர்

முனைவர்.(திருமதி).த.செந்தமிழ்ச்செல்வி  எம்.எஸ்.சி.,எம்.பில்.,பி.எச்டி

கல்லூரிக் கல்வி இயக்குநர்

சென்னை-600 006

பெறுநர்

அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள்

 

ந.க.எண் 22217/ஆர்3/2013 நாள்: 18-06-2013

அய்யா/அம்மையீர்

பொருள்: கல்லூரிக் கல்வித் துறை – சுயநிதி கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில் கல்வி பயிலும் ஆதி திராவிட/பழங்குடியின/மதம் மாறிய கிருத்துவ மாணவ/மாணவியர்க்கு அரசு நியமித்த சுயநிதிக் கல்லூரிகளுக்கான கட்டணக்குழு நிர்ணயித்த கல்வி கட்டணங்கள் திரும்ப வழங்குவது-தகுதி வாய்ந்த மாணவர் பட்டியல் கட்ட  விவரத்துடன் கோருவது-தொடர்பாக.

பார்வை:   1) அரசாணை (நிலை) எண் 6/ஆதி திராவிடர்(ம) பழங்குடியினர் நலத்(ஆதி ந-3)துறை நாள் 09-01-2012

                        2) அரசாணை (நிலை) எண் 92/ஆதி திராவிடர்(ம) பழங்குடியினர் நலத்(ஆதி ந-3)துறை நாள் 11-09-2012

                        3) ஆதி திராவிடர் நலத்துறை இயக்குநரின் கடிதம் ந.க.எண்.அய்1/23643/09 நாள் 21-05-2013 மற்றும் 10-06-2013

                       4) கல்லூரிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறை எண் 39554/R3/12 Dt.12-10-2012

பார்வையில்  காணும் அரசாணை மற்றும் கல்லூரி கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி சுயநிதி கல்லூரிகளில் கல்வி பயிலும் ஆதிதிராவிட/ பழங்குடியின மதம் மாறிய கிருத்துவ மாணவ/மாணவியர்க்கு அரசு நியமித்த சுயநிதிக் கல்லூரிகளுக்கான கட்டணகுழு நிர்ணயித்த கல்வி கட்டணங்கள் மற்றும் அரசு நிர்ணயிக்கும் கல்விக் கட்டணங்கள் திரும்ப வழங்குவது குறித்து தகுதி வாய்ந்த மாணவர் பட்டியல் கட்டண விவரத்துடன் தொகுத்து மொத்த கேட்புத் தொகையை ஒவ்வொரு சுயநிதி கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்க்ளும் கல்லூரி கல்வி இயக்குநருக்கு அனுப்பி வைத்திட அந்தந்த மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்களும் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் சுயநிதிக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு உரிய அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். (பார்வையில் காணும் அரசாணை மற்றும் இயக்கக செயல்முறை கல்லூரிக் கல்வி இயக்க்க இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கல்லூரிக் கல்வி இயக்குநர்

Note

This News is with an attachment file.


Back