அரசாணை மற்றும் நீதிமன்ற ஆணைகளின் அடிப்படையில் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ஒரு துறையில் பணி மூப்பின் அடிப்படையில் பணியில் மூத்த பேராசிரியரே துறைத்தலைவராக நியமிக்கப்பட வேண்டும் - கல்லூரிக் கல்வி இயக்குநரின் அறிவுரை

அனுப்புநர்

முனைவர்.(திருமதி).த.செந்தமிழ்ச்செல்வி  எம்.எஸ்.சி.,எம்.பில்.,பி.எச்டி

கல்லூரிக் கல்வி இயக்குநர்

சென்னை-600 006

பெறுநர்

அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள்

 

ந.க.எண் 35422/எப்4/2013 நாள். 19.9.2013

அய்யா/அம்மையீர்,

 

பொருள்; கல்லூரிக் கல்வித்துறை – அரசு உதவி பெறும் கல்லூரிகள் – பணி மூப்பின்படி துறைத் தலைவர் நியமனம் செய்யப்படுவது – அறிவுரைகள் வழங்குவது - தொடர்பாக.

 

பார்வை:(1)அரசாணை எண். 1785 கல்வி (H3) துறை நாள் 05.12.88
(2) கல்லூரிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் மு.மூ.எண் 27957/அ6/94 நாள் 28.07.94
(3) திருமதி.பரிபூரணம் மரகதம் என்பாரின் 07.08.2013 நாளிட்ட மனு
(4) WP (MD) No.7082/2011 ன் மீது 06.12.2006 வழங்கப்பட்ட நீதி மன்ற ஆணை

------- 

அரசு உதவி பெறும் கல்லூரிகளில் துறைத்தலைவர்களை நியமனம் செய்வதில் உரிய அரசாணை மற்றும் கல்லூரிக் கல்வி இயக்குநரின் ஆணைகளை பின்பற்றப்படுவதில்லை என கல்லூரிக் கல்வி இயக்குநரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இப்பொருள் தொடர்பாக பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

பார்வை(1)ல் காணும் அரசாணையின்படி ஒரு துறையில் பணிமூப்பின்படி பணியில் மூத்த பேராசிரியரே துறைத்தலைவராக தெரிந்தெடுக்கப்பட வேண்டும். மேலும் திருச்சி தூய வளனார் கல்லூரியைச் சார்ந்த திரு.S. குப்புசாமி என்பார் தொடர்ந்துள்ள வழக்கு WP (MD) No.7082/2011 ல் 08.12.2011 அன்று வழங்கப்பட்டுள்ள நீதிப் பேராணையில் சிறுபான்மை கல்லூரிகள் உட்பட அனைத்து உதவி பெறும் கல்லூரிகளும் பணியில் மூத்த பேராசியரை பணிமூப்பின் அடிப்படையில் துறையின் தலைவராக நியமனம் செய்ய வேண்டுமென நெறியாணை வழங்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்டுள்ள அரசாணை மற்றும் நீதிமன்ற ஆணைகளின் அடிப்படையில் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ஒரு துறையில் பணி மூப்பின் அடிப்படையில் பணியில் மூத்த பேராசிரியரே துறைத்தலைவராக நியமிக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.

 

 

கல்லூரிக் கல்வி இயக்குநர்

Note

This News is with an attachment file.


Back