பணி ஓய்வுக்குப் பின் மீளப் பணியமர்வு திட்டத்தின் கீழ் சார்ந்த நிர்வாகத்தின் ஒப்பந்த அடிப்படையில் கல்லூரி முதல்வராக நிர்வாக ஊதியத்தில் பணியாற்றுவதற்கு அரசின் ஆணை கோரி ஒப்புதல் வழங்கக் கோரும் கருத்துருக்களை இனி வருங்காலங்களில் தவிர்க்குமாறு கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு அரசு உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அறிவுறுத்தல்

உயர்கல்வித்(இ2)துறை

கடித எண் 10809/இ2/ 2013-1.நாள் 25.7.2013

அனுப்புநர்

திரு.அபூர்வ வர்மா, இ.ஆ.ப.,

அரசு முதன்மைச் செயலாளர்


பெறுநர்

கல்லூரிக் கல்வி இயக்குநர்

சென்னை-600 006


அம்மையீர்,

 

பொருள்: உதவி பெறும் கல்லூரி – முனைவர்.ஆர்.எல்.இராம்நாத், மதுரை சௌராஷ்டிரா கல்லூரியில் முதல்வராகப் பணி ஓய்வு பெற்று, மீளப்பணியமர்வு 01.06.2013 முதல் 31.05.2015 முடிய இரண்டு வருடங்கள் நிர்வாக ஊதியத்தில் பணியாற்றுவதற்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக.

 

பார்வை: (1) அரசு கடிதம் எண். 11954/இ2/2012-3 நாள் 18.10.2012

(2) அரசு கடிதம் எண். 6838/இ2/2012-3 நாள் 25.6.13

(3) அரசு கடிதம் எண்.8579/இ2/2012-3 நாள் 3.7.2013

(4) தங்களது கடித எண் 21969/ஜி4/2013 நாள் 6.6.2013

------

பார்வையில் காணும் அரசு கடிதங்கள் மற்றும் தங்கள் கடிதம் ஆகியவற்றின் மீது தங்களது கவனம் ஈர்க்கப்படுகின்றது.

2.   பார்வை 4ல் காணும் தங்களது கடிதத்தில், 31-12-2012 அன்று பணியிலிருந்து ஓய்வு பெற்ற முனைவர்.ஆர்.எல்.இராம்நாத், என்பார் அக்கல்வி ஆண்டு இறுதி வரை மறுநியமன அடிப்படையில் 1.1.2013 முதல் 31.5.2013 வரை பணி புரிந்துள்ளார் என்றும், அதன் பிறகு நிர்வாக ஊதியத்தில் 1.6.2013 முதல் 31.5.2015 முடிய முதல்வராக மீளப் பணியமர்வு திட்டத்தின் கீழ் சார்ந்த கல்லூரி நிர்வாகத்தின் ஒப்பந்த அடிப்படியில் நிர்வாக ஊதியத்தில் பணிபுரிய அரசின் அனுமதி வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

3.   கல்லூரிக்கல்வி இயக்குநரின் கருத்துரு அரசாணை (நிலை) எண் 350, உயர்கல்வி, நாள் 9.9.2009இல் கூறப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஆய்வு செய்யப்பட்டது. அவ்வாணையில் கல்லூரி ஆசிரியர்களின் பணி ஓய்வு 58 எனவும், பணி ஓய்வுக்குப் பிறகு மறுநியமனம் வழங்கக் கூடாது என்பதினால், முனைவர்.ஆர்.எல்.இராம்நாத் என்பார், பணி ஓய்வுக்குப்பின் மீளப் பணியமர்வு திட்டத்தின் கீழ் 1.6.2013 முதல் 31.05.2015 முடிய, மதுரை சௌராஷ்டிரா கல்லூரியில் முதல்வராக சார்ந்த நிர்வாகத்தின் ஒப்பந்த அடிப்படையில் நிர்வாக ஊதியத்தில் பணியாற்றுவதற்கு ஒப்புதல் வழங்கக் கோரும் தங்களது கருத்துரு அரசால் நிராகரிக்கப்படுகிறது என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

4.   இனி வருங்காலங்களில் இது போன்ற கருத்துருக்கள் மீது அரசின் ஆணை கோருவதை தவிர்க்குமாறும் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

 

தங்கள் உண்மையுள்ள.

 

 

அரசு முதன்மைச் செயலாளருக்காக

Note

This News is with an attachment file.


Back