மதுரையில் 25-01-2014 அன்று நடைபெற உள்ள மூட்டா கல்வி மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு மாற்றுப்பணி வழங்க ஆணை – கல்லூரிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்

கல்லூரிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள், சென்னை- 600 006

 ந.க.எண் 68452/ஜி3/2014 நாள். 09.01.2014

பொருள்;       கல்லூரிக் கல்வித்துறை - உதவி பெறும் கல்லூரிகள்- மூட்டா- 25-01-2014 அன்று மதுரையில் நடைபெற உள்ள இரண்டாவது கல்வி மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு மாற்றுப்பணி ஆணை -பிறப்பித்தல் – சார்பு.

பார்வை:       மூட்டா பொதுச் செயலாளர் அவர்களின் 27-12-2013 நாளிட்ட கடிதம்.

-------

மூட்டாவின் இரண்டாவது கல்வி மாநாடு 25-01-2014 அன்று மதுரையில் நடைபெறுவதால் அம்மாநாட்டில் Higher Education-Futuristic Perspectives என்ற கருப்பொருளில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு 25.01.2014 அன்று மாற்றுப்பணியாக அனுமதிக்குமாறு பார்வையில் காணும் கடிதத்தில் மூட்டாவின் பொதுச் செயலாளர் கோரியுள்ளார்.

மூட்டா பொதுச் செயலாளரின் கோரிக்கையினை ஏற்று மதுரையில் 25.01.2014 (சனிக்கிழமை) அன்று நடைபெறும் மாநாட்டில் Higher Education-Futuristic Perspectivesஎன்ற கருப்பொருளில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு அவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டமைக்கான வருகைச் சான்றிதழினை மூட்டாவின் பொதுச் செயலாளரிடமிருந்து பெற்று சமர்ப்பித்தால் மாற்றுப்பணி அனுமதி வழங்கலாம் எனத் தெரிவிக்கலாகிறது.

 

கல்லூரிக் கல்வி இயக்குநர்

 பெறுநர்:

1.    அனைத்து மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள்

2.    அனைத்து அரசு கல்லூரிகளின் முதல்வர்கள்

3.    அனைத்து உதவி பெறும் கல்லூரிகளின் செஉஅலர்கள்

நகல்:

பொதுச் செயலாளர் (மூட்டா)

Note

This News is with an attachment file.


Back