மூட்டா இருபத்திரண்டாவது மாநாடு – 27-09-2014 சனிக்கிழமை காலையில் நடைபெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான மினி மாராத்தான் போட்டிகள்


பேரா.பொன்னுராஜ் போட்டிகளைத் துவக்கி வைக்கிறார்

பேரா.ராதாகிருஷ்ணன் தலைமையில் பேரா.கணேசன் வரவேற்கிறார்

மாநாட்டு அரங்கில் பரிசளிப்பு விழா

முனைவர்.பத்மலதா, மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் பரிசுகள் வழங்குகிறார்

போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்கள்

மாநாட்டுப் பொருளாளர் நசீர் அகமது நன்றியுரை

மூட்டாவின் இருபத்திரண்டாவது மாநாட்டின் துவக்க விழா நாளன்று (27-09-2014) காலை 06 மணியளவில் பள்ளி மற்றும் கல்லுரி மாணவ, மாணவியர்களுக்கான மினி மாராத்தான் ஓட்டப் போட்டி பாளையங்கோட்டை லூர்துநாதன் சிலையிலிருந்து துவங்கியது.  போட்டிகளை மூட்டாவின் முன்னாள் தலைவர் பேரா.பொன்னுராஜ் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். மினி மாராத்தான் போட்டியில் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

லூர்துநாதன் சிலையிலிருந்து துவங்கிய மினி மாராத்தான் ஒட்டம் மாநாட்டு அரங்கமான கேடிசி நகர், மகராசி மகாலில் முடிவு பெற்றது. முனைவர்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கான பரிசளிப்பு விழாவில் பங்கேற்றோர் அனைவரையும் மூட்டாவின் இணைப் பொதுச் செயலாளர் பேரா.கணேசன் வரவேற்றார். திருநெல்வேலி மண்டல இணை இயக்குநர் முனைவர்.பத்மலதா பள்ளி மாணவர், மாணவியர் மற்றும் கல்லூரி மாணவர், மானவியர் என நான்கு பிரிவுகளில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பகிர்ந்து கொண்டவர்கள் தவிர ஏழு ஆறுதல் பரிசுகள் என மொத்தம் நாற்பது மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராடினார். மினி மாராத்தான் போட்டியினை வெற்றிகரமாக நடத்திட உறுதுணை புரிந்த அனைவருக்கும் மூட்டா இருபத்திரண்டாவது மாநாட்டு பொருளாளர் முனைவர்.நசீர் அகமது நன்றி நல்கினார்.

Back