அருமனை VTM கல்லூரி நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்து நான்காம் மண்டலம் சார்பில் 20-10-2014 அன்று நடைபெற்ற மாலை நேர தர்ணா போராட்டம்


மண்டலத் தலைவர் வில்சன் தலைமையில் தலைவர் மனோகர ஜஸ்டஸ் துவக்க உரை

விஜயகுமார் அவர்களின் கோரிக்கை விளக்க உரை

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை VTM கல்லூரியில் 14 பேராசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு, நிரந்தரப் பணியிடங்களில் தற்காலிக/சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கில் வசூல் செய்யப்பட்ட பணம் திரும்பத் தரப்படாமல், பணி நியமனம் செய்யப்பட்ட பேராசிரியர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். பணி புரிந்து வரும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பல்கலைக்கழக விதிமுறைகளை மீறி குறைந்த அளவு ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது. வருங்கால வைப்பு நிதிக்கென கல்லூரி நிர்வாகத் தரப்பில் செலுத்த வேண்டிய தொகையானது, ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களது ஊதியத்திலேயே பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. ஆசிரியைகள் மற்றும் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட கல்லூரி அலுவலர் ஒருவர் மீது அளிக்கப்பட்ட புகாரின் மீது நடவடிக்கை எடுக்க கல்லூரி நிர்வாகம் மறுத்து வருகிறது.

 

இந்த முறைகேடுகளையும், அநியாயங்களையும் கண்டித்தும், பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் தமிழக உயர்கல்வித்துறையின் தலையீடு கோரியும் மூட்டா தலைவர் T.மனோகர ஜஸ்டஸ் தலைமையில் கடந்த 20-10-2014 அன்று மாலை 4.30 மணியளவில் அருமனை சந்திப்பில் நடைபெற்ற மாலை நேர தர்ணா போராட்டத்தில் மாவட்டத்திலுள்ள பல்வேறு கல்லூரிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். மூட்டா நான்காம் மண்டலத் தலைவர் R.வில்சன் துவக்கி வைத்த தர்ணா போராட்டத்தினை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் சசிகுமார், தமிழ்நாடு தனியார் கல்லூரி அலுவலர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கனகராஜ், மூட்டா துணைத்தலைவர் ஜான்சன் ஆகியோர் வாழ்த்தி தங்களது ஆதரவினை நல்கினர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் P.விஜயகுமார் VTM கல்லூரி நிர்வாகச் சீர்கேடுகள் குறித்து விளக்கவுரையாற்றினார். மாவட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் அமைப்பாளர் ராமச்சந்திரன் நிறைவுரையாற்ற தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மண்டலப் பொருளாளர் JRV எட்வர்ட் நன்றி தெரிவித்தார்.

Back