நீண்ட நாள் நிலுவையிலுள்ள ஜேஏசி-டான்சாக் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரதம் (14-02-2015) மற்றும் தொடர் மறியல் (24,25,26-02-2015) போராட்டம் – திரளாகக் கலந்து கொள்ள ஜேஏசி-டான்சாக் செயற்குழு வேண்டுகோள்

ஜே.ஏ.சி-டான்சாக் கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும்,குறிப்பாக ஒரு மாதத்திற்குள் 2006 க்குப்பின்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முறையான பணி மேம்பாட்டினை ஏற்கனவே நடைமுறையிலுள்ள பல்கலைக்கழகமானியக்குழுவின் விதிமுறைகளின்படி உடனே வழங்கிட நிதித்துறையுடன் கலந்து பேசி ஆணை பிறப்பிக்க நடவடிக்கைகளை எடுத்திடுவதாகவும், புதிதாகப் பொறுப்பேற்ற உயர்கல்வித்துறைச் செயலர் கடந்த 05.01.2015 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது உறுதியளித்தார். அதனடிப்படையில் ஜே.ஏ.சி-டான்சாக்  சார்பாக ஜனவரி 6,7,8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடத்த இருந்த மறியல் போராட்டம் ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு மாத காலம் கடந்த பின்னும், ஜே.ஏ.சி–டான்சாக் கோரிக்கைகள் மீது எவ்வித முன்னேற்றமும் இல்லை என்பதையும், 2006 க்குப்பின்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கான பணி மேம்பாடு வழங்குவதற்கான கோப்பு (உயர்கல்வித்துறைச் செயலரின் முயற்சிகளுக்குப் பிறகும்) இன்னும் நிதித்துறையில் கிடப்பில் உள்ளது என்பதையும் 30.01.2015 அன்று சென்னையில் கூடிய ஜே.ஏ.சி – டான்சாக் செயற்குழு பரிசீலித்து, கோரிக்கைகளை வென்றெடுக்க வருகின்ற 14.02.2015 அன்று சென்னையில் ஒரு நாள் பட்டினிப்போராட்டம் நடத்துவதென்றும், பிப்ரவரி 24, 25 & 26 ஆகிய தேதிகளில் சென்னையில் தொடர் மறியல் போராட்டம் நடத்திடவும் முடிவு செய்துள்ளது.
ஜேஏசி-டான்சாக் கோரிக்கைகளை வென்றெடுக்க 14.02.2015 அன்று சென்னையில் நடைபெறவுள்ள மாபெரும் பட்டினிப்போராட்டத்திற்கு மூட்டா பகுதியில் ஒவ்வொரு கிளையிலிருந்தும் ஐந்து உறுப்பினர்களுக்கு குறையாமல் கலந்து கொள்வதென்றும், அடுத்த கட்டமாக 2015 பிப்ரவரி 24,25& 26 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ள தொடர் மறியல் போராட்டத்தில், மூட்டா சார்பாக முதல் நாள் (24.02.2015) நான்காம் மண்டலம், இரண்டாம் நாள் (25.02.2015) முதல் மற்றும் இரண்டாம் மண்டலங்கள் மற்றும் மூன்றாம் நாள் (26.02.2015) மூன்றாம் மண்டலம் சார்பிலும் தினமும் குறைந்தபட்சம் 150 உறுப்பினர்களைப் பங்கேற்கச் செய்வதென்றும், மத்தியச்செயற்குழு மற்றும் மண்டலச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் அவசியம் மறியலில் பங்கேற்பதென்றும் கடந்த 01-02-2015 அன்று திருநெல்வேலியில் கூடிய மத்தியச் செயற்குழு முடிவு செய்துள்ளது. 
மண்டல மற்றும் கிளைப் பொறுப்பாளர்கள், கிளைகளிலிருந்து மறியலில் பங்கேற்பவர்கள் பட்டியலை இறுதி செய்து ஜேஏசி-டான்சாக் போராட்டத்தினை வெற்றி பெறச் செய்ய வேண்டும். 

Back