01.01.2006க்குப் பின் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு தர ஊதியம் ரூ.6000லிருந்து ரூ.7000 வழங்கிட ஆணை - கல்லூரிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

கல்லூரிக் கல்வித் துறை

அனுப்புநர்

முனைவர்.மு.தேவதாஸ், எம்.எஸ்.ஸி., எம்.ஃபில்.,பி.எச்.டி, எப்.ப்பி.பி.எஸ்.,

கல்லூரிக் கல்வி இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு)

சென்னை-600 006

பெறுநர்

அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள்,

அனைத்து அரசுக் கல்லூரி முதல்வர்கள்.

 

ந.க.எண்.5827/ஜெ1/2009 நாள்:28-04-2015

அய்யா,

பொருள்: கல்லூரிக் கல்விப் பணி – 01.01.2006க்கு பின்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு தர ஊதியம் ரூ.6000லிருந்து ரூ.7000 வழங்க அரசாணை பெறப்பட்டது – அனுப்பி வைத்தல் – தொடர்பாக.

பார்வை:     1. அரசாணை (நிலை) எண்.350, உயர்கல்வி (எச்1) துறை, நாள்.09.09.2009

2. அரசாணை (நிலை) எண்.78, உயர்கல்வி (எச்1) துறை, நாள்.23.04.2015

பார்வை எண் 2-ல் காணும் அரசாணையின் நகலை பார்வைக்காகவும், தக்க நடவடிக்கைக்காகவும் இதனுடன் இணைத்தனுப்புகிறேன்.

பார்வையில் காணும் அரசாணைகளில் உள்ள நிபந்தனைகளை நிறைவு செய்த உதவிப் பேராசிரியர்களுக்கு தற்போது உள்ள நடைமுறைகளை பின்பற்றியே பணி மேம்பாடு வழங்கவும், தர ஊதியம் ரூ.6000/-லிருந்து ரூ.7000/- வழங்கவும் ஆணை வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அரசுக் கல்லூரிகளை பொறுத்தவரை முதல்வர்கள் சார்பில் பணிமேம்பாடு கோரும் புத்தாக்க மற்றும் புத்தறிவுப் பயிற்சி உள்ளிட்ட நிபந்தனைகளை நிறைவு செய்த தகுதியுள்ள உதவிப் பேராசிரியர்களின் கருத்துருக்களை கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள் தங்கள் மண்டலத்திற்குட்பட்ட அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு இவ்வரசாணையை அனுப்புமாறும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இருந்து பெறப்ப்படும் கருத்துருக்களை நன்கு பரிசீலித்து அரசாணையில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளின்படி பணிமேம்பாடு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாணையை பெற்றுக் கொண்டமைக்கான பெறல் ஏற்பினை தவறாது அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

 

கல்லூரிக் கல்வி இயக்குநர் (மு.கூ.பொ)

நகல்

1.மாநிலக் கணக்காயர், சென்னை-18

2.சார்ந்த கருவூலக் கணக்கு அலுவலர்கள்

3.சார்ந்த சம்பள கணக்கு அலுவலர்கள்

     4.இயக்கக சி,டி,எப்,ஜி,ஐ மற்றும் இசட் பிரிவுகள்

Note

This News is with an attachment file.


Back