அய்ஃபக்டோ கோரிக்கைகளை வென்றெடுக்க 07-08-2015 சென்னையில் மாபெரும் பட்டினிப் போராட்டம் - ஜேஏசி-டான்சாக் செயற்குழு முடிவு

கல்லூரி/பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கான ஏழாவது ஊதிய திருத்தக்குழு அமைத்தல், பல்கலைக்கழக மானியக் குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழு-2010 நெறிமுறைகளில் மூன்றாவது திருத்தம் மற்றும் பி.எச்டி நெறிமுறைகள்-2009 ஆகியவற்றிற்கான மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் ஒப்புதல்,  நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள அய்ஃபக்டோவின் கோரிக்கைகள் மீது மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் உடனடியாக பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணுதல், பல்கலைக்கழக மானியக் குழு-2010 நெறிமுறைகளில் உள்ள API/PBASஐ கைவிடுதல், பணிமேம்பாட்டிற்காக புத்தாக்கப் பயிற்சியில் கலந்து கொள்வதற்கான கால அளவினை டிசம்பர் 2015 வரை நீட்டித்தல், அரசு உதவி பெறாத கல்லூரிகள் மற்றும் வகுப்புகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்துள்ள ஊதியம் வழங்கப்படுதல், கல்வி வணிகமயமாவதை தடுத்து நிறுத்தல், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல் மற்றும் அரசின் கல்விக் கொள்கை தொடர்பாக ஆசிரியர் சங்கங்களை கலந்தாலோசித்தல்  உள்ளிட்ட அய்ஃபக்டோவின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜேஏசி சார்பில் 07-08-2015 வெள்ளியன்று சென்னையில் மாபெரும் பட்டினிப் போராட்டம் நடத்திட ஜேஏசி - டான்சாக் செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஒன்றுபட்ட போராட்டம்! வென்று காட்டும் நிச்சயம்!

Back