தமிழக வெள்ள நிவாரண நிதிக்கு மூட்டர கல்லூரி ஆசிரியர்கள் ஒரு நாள் ஊதியம் - மத்தியச் செயற்குழு முடிவு

தமிழகத்தில் வரலாறு காணாத அளவிற்கு பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தங்களது குடியிருப்புகளில் இருந்து வெளியேற வேண்டிய அளவிற்கு வெள்ளம் ஏற்பட்டதால், நாள் கணக்கில் உற்றாரையும், உடமைகளையும் இழந்து முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 260க்கும் மேற்பட்டோர் வெள்ளச்சீற்றத்திற்குப் பலியாகியுள்ளனர். சென்னையையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் இயற்கைப்பேரிடர் பாதித்த பகுதிகள் என அறிவித்து நிவாரணப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த இயற்கைப்பேரிடரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மூட்டா மத்தியச் செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

 

மேலும், இப்பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிடும் பொருட்டு, தமிழக அரசின் வெள்ள நிவாரண நிதிக்கு மூட்டா சங்கக் கல்லூரி ஆசிரியர்கள் தங்கள் ஒரு நாள் ஊதியத்தை வழங்கிட மூட்டா மத்தியச் செயற்குழு முடிவு செய்துள்ளது. டிசம்பர் 2015 மாத ஊதியத்திலிருந்து ஒருநாள் ஊதியத்தைப் பிடித்தம் செய்து தமிழக அரசு வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கிடக்கோரி தமிழக உயர்கல்விச் செயலருக்கும், தமிழக அரசு முதன்மைச் செயலாளருக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

Note

This News is with an attachment file.


Back