05.08.2016 அன்று கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி புதுடெல்லி ஜந்தர் மந்தரில் இருந்து பாராளுமன்றம் நோக்கி நடைபெறும் மாபெரும் பேரணியில் திரளாக கலந்து கொள்ள மூட்டா பொதுக்குழுவில் முடிவு

26.06.2016 அன்று டேராடூனில் நடைபெற்ற அய்பெக்டோவின் தேசியச் செயற்குழுவில் பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகள்2010 மற்றும் பிஎச்.டி விதிமுறைகள் தொடர்பான பல்கலைக்கழக மானியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துதல், கல்விக்கு ஒட்டு மொத்த தேசிய உற்பத்தியில் (GDP) 6% நிதி ஒதுக்குதல், பொதுநிதியில் இயங்கும் கல்வி நிறுவனங்களை வலுப்படுத்துதல், தனியார் கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்துதல், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு உறுதிப்படுத்தப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்துதல், பணிமேம்பாட்டிற்கு புத்தாக்கப்/புத்தொளிப் பயிற்சியில் கலந்து கொள்வது குறித்த காலக்கெடுவை 31.12.2016 வரை நீட்டித்தல், உயர்கல்வியில் அந்நிய மூலதனத்தை அனுமதிக்கக்கூடாது என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 05.08.2016 அன்று புதுடெல்லி ஜந்தர் மந்தரில் இருந்து பாராளுமன்றம் நோக்கி மாபெரும் பேரணி நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்பேரணியில் கலந்து கொள்ள ஒவ்வொரு கல்லூரி மூட்டா கிளையிலிருந்தும் இருவரை அனுப்பி வைத்திட 03.07.2016 அன்று திருநெல்வேலி மூட்டா அலுவலகத்தில் நடைபெற்ற மூட்டா பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Back