2010-11ம் நிதியாண்டிற்குரிய இரண்டாம் தவணை நிலுவைத் தொகை உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் - கல்லூரிக் கல்வி இயக்குநர்

கல்லூரிக் கல்வித் துறை

 

 

 

அனுப்புநர்                                             

திரு.சு.ஜெயபாஸ்கரன் சார்லஸ் எம்.ஏ.,எம்.பில்.        

கல்லூரிக் கல்வி இயக்குநர்                            

சென்னை – 600 006

 

பெறுநர்

அனைத்து மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள்

 

ந.க.எண்.23830/ஜி3/2010              நாள்: 30.06.2010

 

அய்யா/அம்மையீர்,

 

பொருள்:       கல்லூரிக் கல்வித்துறை – அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கான திருத்திய ஊதிய நிர்ணயம் – நிலுவைத்தொகையில் 2வது தவணைத்தொகை விடுவிப்பது – தொடர்பாக.

பார்வை:            1. அரசாணை (நிலை) எண்.350 உயர்கல்வி(எச்-1)துறை, நாள் 09.09.2009

2. அரசுக் கடிதம் எண்.17383/எச்-1/2009-10, நாள் 11.03.2010

3. 22.06.2010 மற்றும் 23.06.2010 நாளிட்ட மூட்டா சங்கச் செயலாளரின் தந்திகள்.

 

 

பார்வை ஒன்றில் காணும் அரசாணையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் முதல்வர்கள்/ஆசிரியர்கள்/நூலகர்கள்/உடற்கல்வி இயக்குநர்களுக்கான பல்கலைக்கழக மான்யக் குழுவின் திருத்திய ஊதிய நிர்ணயம் குறித்து உரிய ஆணைகள் வழங்கப்பட்டன. அதனடிப்படையில் 1.1.2006 முதல் திருத்திய ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டு, பணப்பலன் வழங்கப்பட்ட நாளான 1.1.2007 முதல் 31.8.2009 முடிய நிலுவைத் தொகை கணக்கிடப்பட்டு, அவ்வரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு மூன்று தவணைகளாகப் பிரிக்கப்பட்டு 2009-10ம் ஆண்டுக்குரிய முதல் தவணைத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பார்வை 2ல் காணும் அரசுக் கடிதத்தில் மேற்காண் ஊதிய நிர்ணயம் குறித்து சில தெளிவுரைகள் வழங்கப்பட்டு, அத் தெளிவுரைகள் தொடர்பாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்க (AUT) செயலரின் 29.03.2010 நாளிட்ட கடிதத்தில் கூடுதல் தெளிவுரைகள் கோரப்பட்டு உரிய ஆணைகள் வழங்கக் கோரி அக்கருத்துரு தற்போது அரசின் பரிசீலனையில் உள்ளது. இது தொடர்பாக அரசின் ஆணைகள் எதிர்பார்க்கப்படும் நிலையில் உதவி பெறும் கல்லூரிகளில் திருத்திய பல்கலைக்கழக மான்யக் குழுவின் இரண்டாம் தவணை ஊதிய நிலுவைத் தொகையினை வழங்குவது தொடர்பாக பின்வருமாறு ஆணைகள் வழங்கப்படுகின்றன.

 

1.        2009-10ஆம் நிதியாண்டில் வழங்கப்பட்ட திருத்திய பல்கலைக்கழக மான்யக் குழுவின் முதல் தவணை நிலுவைத் தொகையினை போன்றே, 2010-11ம் நிதியாண்டிற்குரிய இரண்டாம் தவணை நிலுவைத் தொகை உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

2.        அரசிடமிருந்து தெளிவுரை பெறப்பட்ட பின், அதனடிப்படையில் திருத்திய ஊதிய நிர்ணயம் மேற்கொண்டு, நிலுவைத் தொகையை விட, ஏற்கனவே அதிகமான தொகை வழங்கியிருப்பது தெரிய வரின் அதனை தொடர்புடைய ஆசிரியர்களிடமிருந்து அவர்களது ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட வேண்டும்.

3.        1.9.2009 முதல் மாதந்தோறும் ஊதியப்பட்டியலில் அனுமதிக்கப்பட்டு வரும் அதிகப்படியான தொகையையும் சார்ந்த ஆசிரியர்களின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்ய வேண்டும்.

 

 

ஒப்பம்

கல்லூரிக் கல்வி இயக்குநர்

 

 

Note

This News is with an attachment file.


Back