Recent News

Recent Circulars

சுயநிதி ஆசிரியர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க சென்னையில் 22-08-2011 அன்று ஆர்ப்பாட்டம்

உயர்கல்வி மானியக் கோரிக்கை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் ஆகஸ்ட் திங்கள் 22 ஆம் நாளன்று தமிழக அரசின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் சுயநிதி கல்லூரி/வகுப்பு, மனோ கல்லூரிகள், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பணி புரியும் ஆசிரியர்களது பணிநிலை மேம்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் மூட்டா சார்பில் சென்னையில் நடைபெற உள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் நமது கோரிக்கைகளை சட்டமன்றத்தில் எழுப்ப உறுதியளித்துள்ளனர்.

கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடக்க கூடிய ஆர்ப்பாட்டத்தில் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு மூட்டாவின் குரல் தமிழக சட்டமன்றத்தில் ஓங்கி ஒலித்திடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கிளைச்செயலாளர்கள் செய்திடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

·         தமிழகத்தில் உள்ள சுயநிதி கல்லூரி/வகுப்பு/ பல்கலைக்கழகக் கல்லூரி/மனோ கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்;களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்துள்ள ஊதியம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திடவும், சுயநிதி கல்லூரி/வகுப்பு ஆசிரியர்;களுக்கு தமிழக அரசு ஊதிய மானியத்தை வழங்கிடவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.

·         சுயநிதி கல்லூரி/வகுப்புகளில் பணிபுரியும் ஆசிரியர்;களுக்கு அரசு விதிப்படி மகப்பேறு உள்ளிட்ட விடுப்பு, சம வாய்ப்பு, பணிப்பாதுகாப்பு மற்றும் உரிமைகள் வழங்கும் வகையில் தமிழ்நாடு தனியார் கல்லூரி ஒழுங்காற்றுச் சட்டத்தில் உரிய திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும்.

·         அனைத்து சுயநிதி பிரிவு ஆசிரியர்;களின் பணிநிலைகளை அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்;களுக்கு இணையாக அமல்படுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

·         தமிழகத்தில் சுயநிதி பிரிவுகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவிப் பணம், பேருந்து சலுகைக் கட்டணம், கல்விக் கட்டணச் சலுகை போன்ற அனைத்து சலுகைகளும் எவ்வித வேறுபாடின்றி வழங்கப்பட வேண்டும்

 

போராடாமல் வென்றதில்லை . . . போராட்டங்கள் தோற்றதில்லை . . .

போராடுவோம் . . . வெற்றி பெறுவோம் . . .

 

ஆகஸ்ட் 22 இல் சென்னையில் கூடுவோம்! உரிமைகளை வென்றெடுப்போம்!



Back