Recent News
Recent Circulars
25-01-2014 மூட்டா இரண்டாவது கல்வி மாநாடு - கல்வி மாநாட்டில் நடைபெற உள்ள கருத்தரங்கில் சமர்ப்பிக்க உள்ள ஆய்வுக்கட்டுரைகளை 31-12-2013க்குள் அனுப்ப வேண்டுகிறோம்.
மூட்டா இரண்டாவது கல்வி மாநாடு
கடந்த 2010ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற்ற மூட்டாவின் 20ஆவது பொதுமாநாட்டில் இரண்டு பொதுமாநாடுகளுக்கிடையில் கல்வி மாநாடு ஒன்றினை நடத்துவது என்று முடிவாற்றப்பட்டு,. முதலாவது கல்வி மாநாடு கடந்த 2012 பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி “NEW PERSPECTIVES IN CBCS IN TAMILNADU” என்ற கருப்பொருளில் தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.
20.10.2013 அன்று மதுரை மூட்டா அலுவலகத்தில் கூடிய மூட்டாவின் பொதுக்குழுவில் “Higher Education – Futuristic Perspective” என்ற கருப்பொருளை முன்னிறுத்தி மூட்டாவின் இரண்டாவது கல்வி மாநாட்டினை 25.01.2014ஆம் நாளன்று நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மூட்டா உறுப்பினர்கள் மாநாட்டுக் கருப்பொருளையொட்டிய கீழ்குறிப்பிடப்பட்டுள்ள தலைப்புகளில் தங்களது ஆய்வுக்கட்டுரைகளை கல்வி மாநாட்டில் நடைபெற உள்ள கருத்தரங்கில் சமர்ப்பிக்கலாம். கருத்தரங்கில் சமர்ப்பிக்க உள்ள கட்டுரைகளை 31-12-2013க்குள் முனைவர்.T.சந்திரகுரு, கல்விக்குழு அமைப்பாளர், 6 காக்காத் தோப்புத் தெரு, மதுரை-625001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மன்ற உறுப்பினர்கள் தங்களது ஆய்வுக் கட்டுரையை கல்விக்குழு அமைப்பாளருக்கு தங்களது மூட்டா கிளைச் செயலாளர் மூலமாக அனுப்பி வைக்கவும். உறுப்பினர்களிடமிருந்து பெறப்படும் ஆய்வுக் கட்டுரைகளை தபால் மூலமாக மூட்டா அலுவலகத்திற்கோ அல்லது mutaacademicconference@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ கிளைச் செயலாளர்கள் கல்விக்குழு அமைப்பாளருக்கு அனுப்பி வைக்கலாம்.
கட்டுரைகளுக்கான தலைப்புகள்:
· Curriculum Development
· Evaluation System
· Teaching and learning process
· Higher Education Policy
· Autonomy in Higher Education
· Democratisation of Higher Education
மன்றத்தின் கல்வி மாநாட்டையொட்டி உறுப்பினர்கள் உயர்கல்வியின் சகல பரிமாணங்கள் குறித்து தங்களின் உரத்த சிந்தனையை வெளிப்படுத்தி கல்வி மாநாட்டினை சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.