திருநெல்வேலியில் 27, 28 செப்டம்பர் 2014இல் நடைபெற உள்ள மூட்டா இருபத்திரண்டாவது மாநாட்டினை வெற்றி பெறச் செய்வோம்
மூட்டாவின் 22ஆவது பொதுமாநாடு 2014 செப்டம்பர் 27-28 (சனி, ஞாயிறு) ஆகிய தேதிகளில் திருநெல்வேலி, கே.டி.சி நகர், மகராசி மகாலில் நடைபெறவுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இம்மாநாட்டினை”அனைவருக்கும்தரமான, சார்பற்ற, சமச்சீர் உயர்கல்வியை நோக்கி” (Towards Equitable, Inclusive Secular and Quality Higher Education for all) என்றகருப்பொருளில் நடத்தவுள்ளோம்.
· பொதுமாநாட்டினையொட்டி கடந்த இரண்டு மாதங்களில், பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவியர்கள் பங்கேற்ற இலக்கியப்போட்டிகள், கலைவிழாக்கள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தடகளப் போட்டிகள் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
· மாநாட்டின் முதல் நாள்(27.09.2014) காலை 6.00 மணிக்கு பாளை லூர்துநாதன் சிலையிலிருந்து மாநாட்டு மண்டபம் (மகராசி மகால், கே.டி.சி.நகர்) வரை ”அனைவருக்கும் உயர்கல்வி கோரி” 1000 க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொள்ளும் மினி மாரத்தான் போட்டி நடைபெறவுள்ளது. அப்போட்டியினை திருநெல்வேலி கோட்டாட்சியர் திரு.சி.சீனிவாசன் அவர்கள் கொடியசைத்து துவங்கி வைக்கிறார்கள். வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுப்பொருட்கள் மற்றும் சான்றிதழ்களை திருநெல்வேலி மண்டலக் கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் முனைவர்(திருமதி)பத்மலதா அவர்கள் வழங்குகிறார்கள்.
· மாநாட்டை ஒட்டி மூட்டா வரலாற்றைச் சித்தரிக்கும் மூட்டா கண்காட்சியை மூட்டாவின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் பேரா. எஸ். மரகதசுந்தரம் அவர்கள் திறந்து வைக்கிறார்கள்.
· மாநாட்டின் முதல் நாள் காலை அமர்வு அனைவருக்கும் தரமான, சார்பற்ற, சமச்சீர்உயர்கல்வியை நோக்கி என்ற கருப்பொருளில் தேசியக் கருத்தரங்கமாக நடைபெறவுள்ளது. மன்றத் துணைத்தலைவர் பேரா.எம்.நாகராஜன் தலைமை வகிக்கிறார். மத்தியப்பிரதேசம் (சாகர்) விவேகானந்த் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர். கே.ஏ.மணிக்குமார் அவர்கள் கருத்தரங்கத்தைத் துவக்கி வைக்கிறார். அகில இந்திய பல்கலைக்கழக மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் (அய்பெக்டோ) தேசியச்செயலாளர் பேரா.மதுபரஞ்சபே மற்றும் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தின் ஆதீனகர்த்தர் மதிப்புமிகு பொன்னம்பல அடிகளார் ஆகியோர் கருத்துரை ஆற்றுகின்றனர்.
· முதல்நாள் மதிய அமர்வில் நிர்வாகிகள், முதல்வர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், மற்றும் பிற கல்லூரி ஆசிரியர் தோழமைச்சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொள்ளும் வாழ்த்தரங்கம் நடைபெறும். அதன் பின் நடைபெறும் செயலரங்கத்தில் பொதுச்செயலர் அறிக்கை, தீர்மானங்கள் மற்றும் மன்ற விதித்திருத்தம் போன்றவை விவாதித்து முடிவெடுக்கப்படும்.
· இரவு 07.00 மணிக்கு பல்வேறு கல்லூரிகளிலிருந்து கலைவிழாப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவியர் கலந்து கொள்ளும் கலைவிழா நடைபெறும். அதில் நெல்லை மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் செயலாளர் திரு. திருவுடையான் சிறப்பு நிகழ்ச்சி வழங்குகிறார்.
· இரண்டாம் நாள்(28.09.2014) காலை 09.00 மணிக்கு கே.டி.சி.நகர் பேருந்து நிறுத்தத்திலிருந்து துவங்கும் மாநாட்டுப் பேரணியை திருநெல்வேலி மாநகர அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டுக்குழுவின் அமைப்பாளர் திரு. சி.முத்துக்குமாரசாமி அவர்கள் துவங்கி வைக்கிறார்.
· மூட்டா 22ஆவது மாநாட்டுக் கொடியினை மூட்டாவின் முன்னாள் துணைத்தலைவர் பேரா.பி.விஜயகுமார் அவர்கள் ஏற்றிவைக்கிறார்.
· பொதுமாநாட்டிற்கு மன்றத் தலைவர் பேரா.டி.மனோகர ஜஸ்டஸ் அவர்கள் தலைமையேற்கிறார். மன்றப் பொருளாளர் பேரா.ஆர்.பாண்டி அவர்கள் மறைந்த உறுப்பினர்களுக்கான அஞ்சலித் தீர்மானத்தை முன் மொழிகிறார். மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவர் முனைவர்.எஸ்.நவநீதகிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்துகிறார்
· பொது மாநாட்டினை புதுடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக (JNU) பொருளாதாரப் பேராசிரியர் முனைவர் பிரபாத்பட்நாயக் அவர்கள் துவக்கி வைக்கிறார்.
· மூட்டா மாநாட்டு சிறப்பு மலரை இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திரு.அசோக் வர்தன் ஷெட்டி இ.ஆ.ப அவர்கள் வெளியிட, அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்துணைவேந்தர் முனைவர். மணிமேகலை அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள்.
· மன்றப்பொதுச்செயலாளர் பேரா.எஸ்.சுப்பாராஜு மாநாட்டுத் தீர்மானத்தை முன்மொழிகிறார். அய்பெக்டோவின் துணைத்தலைவர் பேரா.எஸ்.விவேகானந்தன் அவர்கள் வாழ்த்துரை வழங்குகிறார். இறுதியாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றூம் கலைஞர்கள் சங்கத்தின் மாநில கெளரவத்தலைவர் பேரா.அருணன் அவர்கள் மாநாட்டு நிறைவுரை நிகழ்த்துகிறார். மாநாட்டுச்செயலர் முனைவர்.ஆர்.முருகேசன்அவர்களின் நன்றியுடன் மாநாடு நிறைவுபெறுகிறது.