மூட்டா நடத்துகின்ற உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசிய தகுதித் தேர்வு (National Eligibility Test - NET) 27ஆவது பயிற்சி வகுப்புகள்

 

கல்லூரி மற்றும் பல்கலைக் கழக உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசிய தகுதித் தேர்வுகளை (நெட் - National Eligibility Test - NET) National Testing Agency என்ற நிறுவனம் ஆன்லைன் முறையில் வருடத்திற்கு இருமுறை நடத்தி வருகிறது. வரும் ஜூன் மாதம் 20ஆம் தேதியிலிருந்து கலை பாடப்பிரிவுகள், கணிப்பொறி அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் உட்பட 81 பாடங்களுக்கான நெட் தேர்வுகள் நடைபெறவுள்ளன.

இத்தேர்வுகளை முதுநிலை இறுதி ஆண்டு பயின்று வருகின்ற மாணவர்களும் எழுதலாம். இரண்டு கேள்வித்தாள்களைக் கொண்டதாக நெட் தேர்வு நடத்தபப்ட்டு வருகிறது. முதலாம் கேள்வித்தாளில் (PAPER-1) “கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சித்திறன்” (Teaching and Research Aptitude) தொடர்பான வினாக்களும், இரண்டாம் கேள்வித்தாளில் (PAPER-2) விண்ணப்பதாரரின் பட்ட மேற்படிப்பு பாடத்திலிருந்து கேள்விகளும் கேட்கப்படும். 3 மணி நேரம் நடைபெறும் ஆன்லைன் தேர்வில் தாள்-1ல் 50 அப்ஜக்டிவ் டைப் வினாக்களும், தாள்-2ல் 100 அப்ஜக்டிவ் டைப் வினாக்களும் கேட்கப்படும். ஒரு வினாவிற்கு 2 மதிப்பெண் வீதம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். எதிர்மறை மதிப்பெண்கள் வழங்கப்படாது. தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் பொதுப்பிரிவினருக்கு 40%, இதரபிரிவினருக்கு 35% என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச மதிப்பெண்கள் எடுத்தவர்கள் பட்டியலிலிருந்து, தேர்வு எழுதியவர்களில் 6 சத மாணவர்கள் பாடப்பிரிவுவாரியாக இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்ச்சி செய்யப்படுவர்.

தங்களுடைய பட்டமேற்படிப்பு பாடங்களில் போதிய திறமைகளைப் பெற்றிருந்தும், நெட் தேர்வின் முதலாம் தாளில் போதிய பயிற்சி இன்மையால், நெட் தேர்வில் தேர்ச்சி பெற பல மாணவர்களும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே நெட் தேர்வு தாள் ஒன்றுக்கான உரிய பயிற்சியை கல்லூரி ஆசிரியர்கள் சங்கமான “மூட்டா தொடர்ந்து நடத்தி வருகிறது. மூட்டாவின் 27வது மாலை நேர பயிற்சி வகுப்பு வரும் மே 27 முதல் ஜூன் 14 வரை மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை தினமும் மூட்டா அலுவலகம், கதவு எண் 6, காக்காதோப்பு தெரு (சென்னை சில்க்ஸ் அருகில்), மதுரை-1 என்ற முகவரியில் நடைபெறும்.

இப்பயிற்சியில் சேரவிரும்பும் கலை பாடப்பிரிவுகள், கணிப்பொறி அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் பாட ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை இறுதி ஆண்டு மாணவர்கள் வருகின்ற மே 24க்குள் தங்கள் பெயர் மற்றும் பாடப்பிரிவை குறுஞ்செய்தியாக 94438-30200 என்ற எண்ணிற்கு அனுப்பி பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சி கட்டணம் எதுவுமின்றி இலவசமாக வழங்கப்படும். பயிற்சிக்கான கையேடு மற்றும் பராமரிப்பு செலவிற்கான பங்களிப்புத் தொகையாக பயிற்சியில் கலந்து கொள்பவர்கள் ரூ.500 மட்டும் செலுத்திட வேண்டும்.

பயிற்சி தொடர்பான மேலதிக விபரங்களைப் பெறுவதற்கு 94438 30200 என்ற எண்ணில் பயிற்சி இயக்குநர் பேரா.G.சுரேஸ்குமார் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

Note

This News is with an attachment file.


Back