மதுரையில் பேரா.வெ. சண்முகசுந்தரம்‌ நினைவு நாள்‌ கருத்தரங்கம்‌ - நூல் வெளியீட்டு விழா

பேரா.வெ. சண்முகசுந்தரம்‌ நினைவு நாள்‌ கருத்தரங்கம்‌

இந்தியக்கல்வியின்‌ இருண்ட காலம்‌

(தேசிய கல்வி‌ கொள்கை- வரைவு 2019 குறித்த கட்டுரைகள்‌)

நூல்‌ வெளியீட்டு விழா

 

வரவேற்புரை                             பேரா.S..தங்கமாரியப்பன்‌

தலைவர்‌, மூட்டா முதலாம்‌ மண்டலம்‌

தலைமை                                 பேரா.S.ராதாகிருஷ்ணன்

தலைவர்‌, மூட்டா

முன்னிலை                               பேரா.A.T.செந்தாமரைக்கண்ணன்‌

பொருளாளர்‌, மூட்டா

பேரா.S..பழனி

இணைப்பொதுச்செயலாளர்‌, மூட்டா

வாழ்த்துரை                               திரு.M.கண்ணன்‌

மாநிலத்‌ துணைத்தலைவர்‌, SFI

நூலை வெளியிட்டு சிறப்புரை             பேரா.M.நாகராஜன்‌

பொதுச்செயலாளர்‌, மூட்டா

நூலை பெற்றுக்‌ கொண்டு கருத்துரை      பேரா.P.விஜயகுமார்‌

முன்னாள்‌ பொதுச்செயலாளர்‌, மூட்டா

நன்றியுரை                                பேரா.E.B.ஞானேஸ்வரன்‌

தலைவர்‌, மூட்டா இரண்டாம்‌ மண்டலம்‌

 

நாள்‌: 27/7/2019 சனிக்கிழமை காலை 10 மணி

இடம்‌: மூட்டா அரங்கம்‌, மதுரை-1

 

அனைவரும்‌ வருக

 

இந்தியக்கல்வியின்‌ இருண்ட காலம்‌

(தேசிய கல்வி‌ கொள்கை- வரைவு 2019 குறித்த கட்டுரைகள்‌)

எஸ்.எஸ்.ராஜகோபாலன், ச.மாடசாமி, பொ.ராஜமாணிக்கம், ப.சிவகுமார், ராமானுஜம், நா.மணி, இரா.முரளி, ம.ராஜேந்திரன், சிவா, பிரின்ஸ் கஜேந்திரபாபு, ஆயிஷா இரா.நடராஜன், அ.மார்க்ஸ் போன்ற கல்வியாளர்கள் எழுதியிருக்கும் கட்டுரைகளைத் தொகுத்து  ’இந்தியக் கல்வியின் இருண்ட காலம் - தேசியக் கல்விக் கொள்கை (வரைவு) 2019’ என்ற தலைப்பில் நூலாக்கி பாரதி புத்தகாலய வெளியீடாக இந்திய மாணவர் சங்கமும், மூட்டாவும் இணைந்து கொண்டு வந்திருக்கின்றன. 

நூல் குறித்த குறிப்பு

பொதுவாக ஒரு நாட்டை ஆளும்‌ வர்க்கம்‌ அதன்‌ அரசியல்‌ பொருளாதார தன்மைகளுக்கு ஏற்றவாறு அந்நாட்டின்‌ கல்வி முறையை வைத்துக் கொள்ளும்.

இந்த நெருக்கடிகளின்‌ ஊடாக இந்திய அரசியலில்‌ மீண்டும்‌ இந்திய மண்ணில்‌ ஒரு பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிறுவ முயலும்‌ ஆர்‌எஸ்எஸ்‌ அமைப்பின்‌ வகுப்புவாத பலம்‌ அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.

பாஜக 2014ஆம்‌ ஆண்டு ஆட்சியைப்‌ பிடித்தது. இந்த நிலையில் இந்துத்துவ வளர்ச்சிப் போக்குகளோடு இணைந்து இந்திய முதலாளித்துவ பயணத்தை தொடங்கியது. இந்துத்துவத்திற்கு அதன்‌ இலக்குகளை அடைய உலக கார்ப்பரேட் முதலாளித்துவத்தோடு கைகோர்த்து செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இப்போது இந்த வரைவுக்‌ கொள்கையில்‌ கூறப்பட்டுள்ள ஆபத்துகளை தடுக்க வேண்டிய பணிகளை உடனடியாக செயல்படுத்துவது, அதற்கான திட்டங்களை வகுப்பது, செய்ய முன்வைப்பது, செயல்பாட்டாளர்களுக்கு ஆரோக்கியமான போராட்ட திட்டங்களை அறிந்து கொள்ள உதவுவதும் . . .

இந்திய அரசின் புதிய வரைவு கல்விக் கொள்கையின் மீதான முதல் விமர்சன நூலாக வெளி வருகிறது. 

Back