Recent News

Recent Circulars

மூட்டா 23 ஆவது பொது மாநாடு - மாநாட்டு சிறப்பு மலருக்கான கட்டுரைகள் - தொடர்பாக

2017 ஜனவரி 7 மற்றும் 8ஆம் தேதிகளில் "ஜனநாயக, மதச்சார்பற்ற, சமத்துவக் கல்விக் கொள்கை - மாற்று அணுகுமுறை" என்ற கருப்பொருளை உள்ளடக்கி மூட்டாவின் 23ஆவது பொதுமாநாடு மதுரையில் சிறப்பாக நடைபெற உள்ளது. மாநாட்டு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக மாநாட்டு சிறப்புமலர் ஒன்றினை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டு கருப்பொருளையொட்டிய, இன்றைய உயர்கல்வி சம்பந்தப்பட்ட தங்களது கட்டுரைகளை தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுதி பேரா.ப.த.பால்பாண்டியன், தலைவர், மூட்டா 23ஆவது மாநாட்டு மலர்க்குழு, 107A ஆசிரியர் காலனி, குமாரபுரம், திருச்செந்தூர் – 628215 என்ற முகவரிக்கு வரும் டிசம்பர் திங்கள் 14ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். 
தொடர்பிற்கு: 
மின் அஞ்சல்:pandian58@gmail.com
அலைபேசி: 9442885510

மாநாட்டு மலர்க் குழு



Back