JAC உறுப்பினர் சந்திப்பு இயக்கம் January 4, 2010 - February 15, 2010

உறுப்பினர் சந்திப்பு இயக்கம்

ஏழை எளியோர்களுக்கு உயர்கல்வியினை இல்லாதொழித்திடும் என்ற காரணத்தினால், கல்லூரிகளை ஒருமைவகைப் பல்கலைக்கழகங்களாக மாற்றும் பிற்போக்கான கொள்கை முடிவினை தமிழக அரசு கைவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்ட ஜேஏசி, இக்கோரிக்கையினை வற்புறுத்திடும் வகையில் மாணவர், ஆசிரியர், அலுவலர்களுக்கு ஏற்பட உள்ள நிரந்தரப் பாதிப்புகளை விளக்கிடும் வகையில் உறுப்பினர் சந்திப்பு இயக்கத்தினை ஜனவரி 4 முதல் பிப்ரவரி 15 வரை மேற்கொள்வது என முடிவாற்றியது. 

ஜேஏசி பொறுப்பாளர்கள் கல்லூரி கிளைகளுக்கு வருகை தருகிறார்கள். கிளைச் செயலாளர்கள் கிளைக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து உயர்கல்வி காத்திடும் இப்போராட்டம் வெல்ல முயற்சிகள் அனைத்தையும் எடுத்திட வேண்டும்.

Back