DCE Proceedings – Junior getting more pay than senior anomaly rectification-College as a unit-Orders issued

சென்னை-6, கல்லூரிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்

முன்னிலை: முனைவர்.(திருமதி).த.செந்தமிழ்ச்செல்வி, எம்.எஸ்.ஸி.,எம்.ஃபில்,பி.எச்டி

 

ந.க.எண் 1321/ஜெ1/2012 நாள்: 01-02-2013

 

பொருள்: கல்லூரிக் கல்வித் துறை- பணியில் மூத்தோர், பணியில் இளையோரை விட குறைந்த ஊதியம் பெறும் முரண்பாட்டை களைதல்- ஆணைகள் வழங்குதல் சார்பு.

 

பார்வை: அரசு கடிதம் எண். 4912/எப்1/2012-2 நாள் 03.04.2012

 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் பணி மூப்பில் முதியவர் மற்றும் இளையவர் இடையே ஏற்படும் ஊதிய முரண்பாடுகளை களைய, சார்ந்த புலத்தில் (Same Discipline) பணி புரிபவர்களை மட்டுமே ஒப்பிட்டு ஊதிய முரண்பாடு குறித்த கருத்துருக்கள பரிசீலிக்கப்பட்டு ஆணைகள் வழங்கப்பட்டன. இதனையடுத்து எந்த புலத்தை சார்ந்த ஆசிரியரையும் ஒப்பிட்டு பணி மூப்பில் முதியவர் தமது ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய ஆணையிட வேண்டும் என கல்லூரி ஆசிரியர்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன. இக்கோரிக்கை கவனமுடன் ஆராயப்பட்டது. அதன் அடிப்படையில் பணி மூப்பில் முதியவர் மற்றும் இளையவர் இடையே ஏற்படும் ஊதிய முரண்பாடுகளை களைய சார்ந்த புலத்தில் (Same Discipline)  பணி புரிபவர்களை மட்டுமே ஒப்பிட வேண்டும் என்பதற்கு பதிலாக, இதற்கான இதர நிபந்தனைகளை நிறைவு செய்திடும் நிலையில், எந்த புலத்தை (Any Discipline) சார்ந்தவரையும் ஒப்பிட்டு பணி மூப்பில் முதியவர் மற்றும் இளையவர் இடையே ஏற்படும் ஊதிய முரண்பாடுகளை சரி செய்யலாம் என ஆணையிடலாகிறது.

மேலும், அரசு உதவி பெறும் கல்லூரிகளைப் பொறுத்த வரையில், ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய ஒரு கல்லூரியினை தனி அலகாகக் கருதப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கலாகிறது.

இச்செயல் முறைகளை பெற்றுக் கொண்டமைக்கான பெறல் ஏற்பினை தவறாது அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கலாகிறது.

 

 

கல்லூரிக் கல்வி இயக்குநர்

பெறுநர்

 

1.     மண்டல கல்லூரி இணை இயக்குநர்கள்

அனைத்து மண்டலங்கள்

2.     அரசு கல்லூரி முதல்வர்கள் அனைவரும்

3.     இயக்க சி,டி,ஜி,எப் மற்றும் ஐ- பிரிவுகள்

Note

This News is with an attachment file.


Back