DCE issued orders to the Secretary of V.H.N.Senthikumara Nadar College, Virudhunagar based on the complaints received from the teachers of MUTA unit– Model leave form issued

விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரி மூட்டா கிளை உறுப்பினர்களின் புகாரின் மீது கல்லூரிச்செயலருக்கு கல்லூரிக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தல் – மாதிரி விடுப்பு விண்ணப்ப்ப்படிவம் வழங்கப்பட்டது

 

கல்லூரிக்கல்வி இயக்ககம்

 

அனுப்புநர்

முனைவர்.(திருமதி).த.செந்தமிழ்ச்செல்வி  M.Sc., M.Phil., Ph.D.

கல்லூரிக் கல்வி இயக்குநர்

கல்லூரிக்கல்வி இயக்ககம்

சென்னை-6

பெறுநர்

செயலர்

விருதுநகர் இந்து நாடார் செந்திக்குமார நாடார் கல்லூரி

விருதுநகர்

 

ந.க.எண் 22798/ஜி4/2011 நாள்: 05-02-2013

 

பொருள்: கல்லூரிக் கல்வித் துறை – உதவி பெறும் கல்லூரிகள் – விருதுநகர் வி.இ.நா.செ.நா. கல்லூரி நிர்வாகம் ஆசிரியப் பணியாளர்களிடம் விடுப்பு விதிகளை மீறி செயல்பட்டதாக பெறப்பட்ட புகார்கள் – குறித்து.

 

பார்வை:       1) மூட்டா சங்க ஆசிரியர்களின் 18.04.12 நாளிட்ட மனு

2) அரசு கடிதம் எண். 16614/இ1/12-1 நாள் 05.09.2012.

 

விருதுநகர், விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் பணிபுரியும் மூட்டா சங்கத்தினைச் சார்ந்த ஆசிரியர்கள் தற்செயல், வரையறுக்கப்பட்ட விடுப்பு மற்றும் மாற்றுப் பணிக்கு விடுப்பு வேண்டி விண்னப்பம் அளிக்கும் பொழுது கல்லூரியில் வழக்கத்தில் உள்ள   படிவத்தில் பணிப்பளு சரி செய்யப்படும் விவரம் தெரிவித்து விண்னப்பம் அளிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டு கல்லூரி நிர்வாகத்தால் விடுப்பு அனுமதிக்கப்படாமல் ஊதிய வெட்டு செய்யப்பட்டதாகவும், மூட்டா சங்கத்தைச் சேர்ந்த சில ஆசிரியர்களால் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

என்வே தற்செயல் மற்றும் வ்ரையறுக்கப்பட்ட விடுப்பு விண்ணப்பங்களை ஒரே மாதிரியாக அனைத்து பணியாளர்கள் சார்பிலும் பின்பற்றும் பொருட்டு மாதிரிப் படிவம் பின்வருமாறு அளிக்கலாகிறது.

தற்செயல்/வரையறுக்கப்பட்ட விடுப்பு விண்ணப்பம்

01.   அலுவலரின் பெயர் மற்றும் பதவி              :

02.   பணி புரியும் துறை                             :

03.   பணியின் தன்மை (தற்காலிகம்/நிரந்தரம்)       :

04.   விடுப்பு வேண்டும் நாட்கள்                     :

05.   விடுப்பிற்கான காரணம்                         :

06.   இதுவரை விடுப்பு எடுத்த நாட்கள்               :

07.   தலைமை இடத்தை விட்டுச் செல்ல அனுமதி

(தேவைப்படின்) கோரும் நாட்கள்               :

08.   துறைத்தலைவரின் பரிந்துரை                   :

09.   முதல்வரின் ஆணை                            :

 

தற்செயல் விடுப்பு விண்ணப்பங்களை விடுப்பு அனுபவிக்கும் முன்னரே அளித்து அவைகளில் உத்தரவு பெற்றுக் கொண்ட பின்னரே பணியாளர்கள் தற்செயல் விடுப்பில் செல்ல வேண்டும், எதிர்பாராத காரணங்களினால் ஒருவர் விடுப்பில் முன் உத்தரவில்லாமல் செல்ல வேண்டிய சந்தர்ப்பங்களில் இவ்விதி தளர்த்தப்படலாம். அம்மாதிரி சமயங்களில் அவசர அல்லது எதிர்பாராத நிலையை பின்னர் தெளிவாக சார்ந்த பணியாளர்கள் குறிப்பிட வேண்டும் எனவும் தெரிவிக்கலாகிறது.

கல்லூரிக் கல்வி இயக்குநர்

நகல்
கல்லூரிக் கல்வி இணை இயக்குநர், மதுரை மற்றும் திருநெல்வேலி மண்டலங்கள்

-       இக்கடிதத்தில் காணும் படிவத்தினை தங்கள் மண்டலத்தைச் சார்ந்த உதவி பெறும் கல்லூரிகளின் செயலர்களுக்கு அனுப்பி வைக்கக் கோரலாகிறது.

Note

This News is with an attachment file.


Back