தூய யோவான் கல்லூரி ஆசிரியர் - அலுவலர் கூட்டமைப்பு (FOCEA) துவக்கவிழா


தூய யோவான் கல்லூரி போசியா அமைப்பை துவக்கி வைத்து, பேரா.பொன்னுராஜ் சிறப்புரை

மூட்டாவின் மூன்றாம் மண்டலச் செயலாளர் பேரா.முருகேசன் வாழ்த்துரை

தூய யோவான் கல்லூரியின் ஆசிரியர் - அலுவலர் கூட்டமைப்பு போசியா 25.07.2013 அன்று மாலை 5.00 மணிக்கு துவக்கப்பட்டது. போசியா அமைப்பை துவக்கி வைத்து, மூட்டாவின் முன்னாள் தலைவர் பேரா.பொன்னுராஜ் சிறப்புரையாற்றினார்கள். இந்த கூட்டமைப்பின் தலைவராக பேரா.அருள்ஞானம், செயலராக பேரா.ஆண்ட்ரூஸ், உபதலைவராக திரு. வனஜன், இணைச்செயலராக திரு. இராமசாமி, பொருளாளர்களாக பேரா.விஜயசேவியர் பார்த்திபன், திரு. ஜான் பிரின்ஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பேரா.ஹெய்ஸ்தாசன் வாழ்த்து கோஷத்துடன் கல்லூரி வாயிலில் கூட்டம் துவங்கியது. போசியா கூட்டமைப்பின் வழிகாட்டு நெறிகளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக செனட் உறுப்பினர் பேரா.பீட்டர் பேரின்பராஜா, பேரா.எட்வர்டு டேவிட் சுந்தராஜ், பேரா.கிங்ஸ்ஸி, பேரா.ஜெயசிங் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். மூட்டாவின் மூன்றாம் மண்டலச் செயலாளர் பேரா.முருகேசன், டான்சாக் மண்டலச் செயலர் திரு. மகாராசன், பேரா.எட்வர்டு டேவிட் சுந்தராஜ் வாழ்த்துரை வழங்கினார்கள். இறுதியில் பேரா.ஜான் கென்னடி வாழ்த்துரையுடன் கூடிய நன்றியுரையுடன் கூட்டம் இனிதே முடிவடைந்தது.

Back