நாகர்கோவில் அய்யப்பா கல்லூரியில் மூட்டா மூன்றாவது கல்வி மாநாடு – செப்டம்பர் 26, 2015 – மூட்டா பொதுக்குழு முடிவு

மூட்டா மூன்றாவது கல்வி மாநாட்டினை வரும் செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி மூட்டா நான்காம் மண்டலம் சார்பில் நாகர்கோவில் அய்யப்பா கல்லூரியில் நடத்துவது என 04-07-2015 சனிக்கிழமையன்று மன்றத்தலைவர் பேரா.மனோகர ஜஸ்டஸ் அவர்கள் தலைமையில் திருநெல்வேலி மூட்டா அலுவலகத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் முடிவாற்றப்பட்டது.

மூன்றாவது கல்வி மாநாட்டின் வரவேற்புக்குழு தலைவராக, மூட்டா நான்காம் மண்டலத்தின் தலைவர் பேரா.சி.இரத்தினசிகாமணி, மாநாட்டுச் செயலாளராக, மூட்டா நான்காம் மண்டலத்தின் செயலாளர் பேரா.டி.நாகராஜன் மற்றும் மாநாட்டுப் பொருளாளராக, மூட்டா நான்காம் மண்டலத்தின் பொருளாளர் பேரா.ஐசக் அருள்தாஸ் ஆகியோர் செயல்படுவர்.

மூன்றாவது கல்வி மாநாடு சமகால உயர்கல்விப் பிரச்சனைகள் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெறும். மாநாட்டினையொட்டி நடைபெறும் தேசிய அளவிலான கருத்தரங்கில், மாநாட்டு கருப்பொருளின் மீது பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் வாசிக்கப்பட உள்ளன. கருத்தரங்க ஒருங்கிணப்பாளராக நாகர்கோவில், தே.தி.இந்துக் கல்லூரி பேரா.கே.ஜோசப்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உதவி பெறும் கல்லூரிகளில் பணிபுரியும் நம் மன்ற உறுப்பினர்கள் ரூ.200/- மற்றும் சுயநிதிக் கல்லூரி/வகுப்புகளில் பணி புரியும் நம் மன்ற உறுப்பினர்கள் ரூ.50/- மாநாட்டுக் கட்டணமாக செலுத்திட வேண்டும்.

 

கருத்தரங்கம் தொடர்பான சுற்றறிக்கை விரைவில் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

Back