2010 ஏப்ரல் 29,30 மற்றும் மே 1- உலகமய, தாராளமய, தனியார்மயச் சூழலில், கல்விக் கொள்கையில் ஏற்பட்டுள்ள சூழலை எதிர்கொண்டு, மன்றத்தினை வழிநடத்துகின்ற முறையினை கற்றுத் தரும் உறுப்பினர் பயிற்சி முகாம்

உறுப்பினர் பயிற்சி முகாம்

 நமது மன்றத்தின் உறுப்பினர் பயிற்சி முகாம் ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1 ஆகிய நாட்களில், கேரளாவிலுள்ள குட்டிக்காணம் என்னுமிடத்தில் நடைபெற உள்ளது. நல்ல குளிர்ச்சியான, மலைப்பாங்கான, பனிபடர்ந்த, தேயிலைத் தோட்டத்திற்கு நடுவே அமைந்துள்ள தேஜஸ் அனிமேசன் சென்டரில், நமது பயிற்சி முகாம் 28-04-2010 சனிக்கிழமையன்று மாலை துவங்குகிறது.

  • முகாம் நடைபெற உள்ள குட்டிக்காணம், குமுளி-கோட்டயம் சாலையில், குமுளியிலிருந்து 1.30 மணி நேர பயண தூரத்திலுள்ளது.
  • மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து குமுளிக்கு இயக்கப்படும் பேருந்துகளில், மூன்று மணி நேர பயணத்திற்குப் பின் குமுளியை வந்தடையலாம்.
  • மதுரையிலிருந்து குட்டிக்காணம் 4.30 மணி நேர பயண தூரத்தில் உள்ளது.

உறுப்பினர் பயிற்சி முகாமில் இதுவரை கலந்து கொள்ளாத உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளித்து, கிளையிலிருந்து இருவர் கலந்து கொள்ளுமாறு ஏற்பாடு செய்யுமாறு கிளைச் செயலாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
சுயநிதி வகுப்பு/கல்லூரிகளில் பணிபுரியும் உறுப்பினர்களுக்கும், பெண் உறுப்பினர்களுக்கும் எண்ணிக்கை வரம்பில்லை.
முகாமில் கலந்து கொள்ளக் கூடிய உறுப்பினர்களின் பட்டியலை, உறுப்பினர்களது பெயர் மற்றும் வீட்டு முகவரி, தொலைபேசி / கைபேசி எண்களுடன், தங்களது மண்டலச் செயலாளர்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு கிளைச் செயலாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

உறுப்பினர் பயிற்சி முகாம் என்பது கூடிக் கலையும் நிகழ்வல்ல. உலகமய, தாராளமய, தனியார்மயச் சூழலில், மத்திய, மாநில அரசுகளின் கல்விக் கொள்கையினால் ஏற்பட்டுள்ள சூழலை எதிர்கொண்டு, மன்றத்தினை வழிநடத்துகின்ற முறையினை கற்றுத் தருவது நமது பயிற்சி முகாம். சமூக சிந்தனையோடு மன்றத்தை முன் நடத்தி செல்வதற்கு வழிகாட்டிட, பல்வேறு தொழிற்சங்க தலைவர்கள் முகாமில் சிறப்புரையாற்ற உள்ளனர்.
 

மாறி வரும் கல்விச் சூழல் குறித்த விவாதங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வரும் உறுப்பினர்களை கேரள மாநிலம் குட்டிக்காணத்தில் சந்திப்போம்.
 

Back